ஊர்காவற்றுறை பகுதியில் தனியார் ஒரு வருக்கு சொந்தமான காணியை கடற்டத்தில் ஈடுபட்டிருந்த காணி உரிமையா ளர் ஒருவரை கடற்படையினர் அச்சுறுத்தியுள் ளனர். இந்த அச்சுறுத்தல் தொடர்பில் மனித வுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய காரியாலயத்தில் நேற்றைய தினம் முறைப் பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடற் கரை வீதி, பருத்தியடைப்பு, ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள இரண்டு பரப்பு காணியை சுவீகரிப்பதற்காக நேற்றைய தினம் காணி அளவீட்டு பணிகள் நடைபெறவுள்ளதாக,
மேற்படி காணியின் உரிமையாளருக்கு யாழ்.மாவட்ட நில அளவை திணைக்கள த்தினரால் கடந்த 10ஆம் திகதி அறிவிக்கப்ப ட்டிருந்தது. தனது காணி சுவீகரிப்புக்கு எதிராக போராடுவதற்கு ஆதரவு தருமாறு காணி உரிமையாளர் அயல்;பகுதி மக்களி டம் ஆதரவு கோரியுள்ளார். இதனை அறிந்த கடற்படையின் புலனாய்வு பிரிவினர் கடந்த 23ஆம் திகதி பொதுமக்களை அழைத்து கூட்டம் கூட வேண்டாம் என மிரட்டியுள்ள னர்.
இதனை அடுத்து மறுநாள் 24 ஆம் திகதி காலை காணி உரிமையாளரை தொலை பேசி ஊடாக தொடர்பு கொண்ட கடற்படை புலனாய்வு பிரிவினர், காலை 09 மணிக்கு மண்கும்பான் கடற்படை முகாமுக்கு வரு மாறு அழைத்துள்ளனர்.
இதனால் அச்சமடை ந்த காணி உரிமையாளர் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய காரியால யத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள் ளார்.
எனினும் நேற்றைய தினமும் போரா ட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை, தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட புலனாய்வு பிரிவினர் குறித்த போராட்டத்தை கைவிடுமாறு அச்சுறுத்தியுள்ளனர். அச்சுறு த்தலை மீறியும் போராட்டம் நடைபெற்ற போது போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த புலனாய்வு பிரிவினர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வருகை தந்த வாக னங்களின் இலக்கத்தகடுகளின் எண்களை குறித்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அச்சத்தில் உள்;ளனர்.