பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் 6வது தடவையாக நடாத்தப்பட்ட 2015 ஆம் ஆண்டின் வன்னமயில் தாயக விடுதலைப்பாடலுக்கான நடனத்திறன் போட்டி 450 மேற்பட்ட போட்டியாளர்களுடன் ஏழு பிரிவுகளை உள்ளடக்கிய 275 நடனங்கள் கொண்ட நடனத்திறன் போட்டிகள் மூன்று நாட்களாக தொடர்ந்து நடைப்பெற்றது. முதலாவது நாளாக 20.02.2015 வெள்ளிக்கிழமை 10.30 மணியளவில் பாரீஸ் 18 இல் உள்ள Salle Jeanne D’Arc மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டு ஆரம்ப நாள் நிகழ்வுகளாக காலை 10.00 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.
ஈகைச்சுடரினை 1998ல் நாவற்குளியில் வீரச்சாவடைந்த வீரவேங்கை கப்டன் வரதா துர்க்கா மற்றும் 1990ல் புலொப்பளையில் வீரச்சாவடைந்த வீரவேங்கை மேஐர் பக்கி அவர்களின் சகோதரர் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து மலர் வணக்கம் இடம் பெற்று அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இப் போட்டியின் தலமை நடுவராக சுவிஸ் நாட்டில் இருந்து வந்த நாட்டிய கலாமணி யாழ் பல்கலைக்கழகம் பட்டத்துக்குரிய திருமதி.ஞானசுந்தரி வாசன் அவர்களும், இரண்டாவது நடுவராக டென்மார்க் நாட்டில் இருந்து பரதக்கலைமணி பட்டத்துக்குரியவரும், பாரதிதாசன் பல்கலைக்கழகம் தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி திருமதி. யாழினி பாலேந்திரன் அவர்களும், மூன்றாவது நடுவராக ஜேர்மனி நாட்டில் இருந்து நாட்டியபேரொளி நாட்டியகலாஜோதி பட்டத்துக்குரியவரும் இளநிலைப்பட்டதாரியுமாகிய திருமதி. தனுசா ரமணன் அவர்களும் அறிமுகம் செய்யப்பட்டு அவர்களிடம் போட்டியாளர்களின் விபரக்கோவை கையளிக்கப்பட்டது.
தொடர்ந்து மேற்பிரிவு அ பிரிவு ஆரம்பமானது. தொடர்ந்து ஆ, இ, ஈ முறையே போட்டிகள் நடை பெற்றன. அன்றைய தினம், மத்திய பிரிவு அ, ஆ பிரிவுகள் நடாத்துவதாக ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், நேரகாலப்பற்றாக்குறை காரணமாக, மத்திய பிரிவு ஆ பிரிவு நடாத்தத்தாமதமாகியதால், ஆசிரியரகள், பெற்றோர்கள் ஒத்துழைப்புடன் மறுநாள் செய்வதாக முடிவு செய்யப்பட்டது. அன்றைய தினம் நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
இப்போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் பிரித்தானியாவிலிருந்து சுவிஸ் நோக்கி சென்று கொண்டிருக்கும் விடுதலைச் சுடர் மண்டபத்துக்கு எடுத்து வரப்பட்டது. மக்கள் எல்லோரும் எழுந்து நின்று அந்த விடுதலைச் சுடருக்கு மதிப்பளித்தனர்.
இரண்டாவது நாளாக, 21.02.2015, பிரான்சு புறநகர் பகுதியான Sevran : Salle de Fêtes மண்டபத்தில் காலை 9.30 ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம், அகவணக்கம் செலுத்தப்பட்டது. ஈகைச்சுடரினை மாவீரர் தாட்ஷாயினி சகோதரர் ஏற்றிவைத்து போட்டிகள் மிகவும் விறுவிறுப்பமாக ஆரம்பித்திருந்தது. மண்டபத்தில் இருக்கைகள் இல்லாது மக்கள் சிறிது சிரமத்தினை எதிர்கொண்டிருந்தனர். இது எற்பாட்டளர்களின் கவணத்துக்கு கொண்டுவரப்பட்டது. அன்றைய போட்டிகளாக மத்திய பிரிவு இ, ஈ, முறையே முதல் நாளின் மிகுதியான ஆ பிரிவு போட்டிகளும் நடந்தேறின. அதன் பின்னர், பாலர் பிரிவு, கீழ்ப்பிரிவு அ, ஆ, இ பிரிவுகள் உட்பட, குழு நடனங்கள், கீழ்ப்பிரிவு தொடக்கம் அதி மேற்பிரிவு வரை 115 நடனங்கள் நடைப்பெற்றன. அன்றைய போட்டி நள்ளிரவையும் தாண்டி ஒரு மணிநேரம் நடைபெற்றது. ஆனாலும் போட்டியாளர்களும், பெற்றோர்களும், குழந்தைகளும், ஆசிரியர்களும் மிகவும் உற்சாகமாகவே இருந்தனர். நடுவர்களும் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிருபிக்கும் வகையில் உடனுக்குடன் தங்களது முடிவுகளை தந்திருந்தனார். வெற்றிப்பெற்ற போட்டியாளர்களின் முடிவுகள் உடன் அறிவிக்கப்பட்டது.
மூன்றாம் நாளான 22.02.2015 ஞாயிற்றக்கிழமை முதல் நாள் நடைபெற்ற அதே மண்டபத்தில், ஈகைச்சுடர் ஏற்றலுடன் மலர்வணக்கம் அகவணக்கம் ஈகைச்சுடரினை கப்டன் ரூபனின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் அகவணக்கத்துடன் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகிய வன்னிமயில் விருதுக்கான போட்டியாகையால் அதி மேற்பரிவு அ, ஆ, இ போட்டியாளர்களும் அதி அதி மேற்பிரிவு போட்டியாளர்களும் வன்னிமயில் விருதினை தமதாக்கிக்கொள்ளும் வகையில் தமது உச்சத் திறனை மேடையில் அரங்கேற்றி இருந்தனர். சிறப்புப் பிரிவுக்கான போட்டியும் நடைபெற்றிருந்தது.
முதல் நாள் போட்டிகள் தமதமாக நிறைவுப்பெற்றிருந்தாலும், ஞாயிற்றுக்கிழமை காலை குறிப்பட்ட நேரத்துக்கு போட்டியாளர்கள் மண்டபத்திற்கு வருகை தந்து, தங்களது பூரணமான ஒத்துழைப்பை வழங்கி இருந்தமை குறிப்பட தக்கது.
போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தும், மண்டபத்தில் இருக்கைகள் இல்லாது மக்கள் சிறிது இடநெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தனர். எனினும் நிலைமைகளை புரிந்து கொண்ட எமது மக்கள் மற்றவர்களுக்கு இடங்களை வழங்கி தமது சகோதர உணர்வைக்காட்டியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய போட்டி நள்ளிரவையும் தாண்டி ஒரு மணிநேரம் நடைபெற்றது. ஆனாலும் போட்டியாளர்களும், பெற்றோர்களும், குழந்தைகள், ஆசிரியர்கள் மிகவும் உற்சாகமாகவே இருந்தனர்.
சென்ற ஆண்டை விட, இந்த வருட போட்டியாளர்களின் தொகை அதிகரித்திருந்தது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
நிகழ்வில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பாக உரையாற்றிய ஆசிரியர் திரு. சத்தியதாசன் அவர்கள் எமது வருங்கால சந்ததி எவ்வளவு தூரம் தாய் மண்விடுதலையிலும், அந்த விடுதலைக்கு ஈகம் செய்த மாவீரர்களையும், மக்களையும் நினைத்து அதனை தமது நடன ஆறறுகையின் மூலம் வெளிக்காட்டியிருந்ததையும் பாராட்டியிருந்த அதேவேளை மிகச் சிரமங்களுக்கும் மத்தியிலும் கண்ணும் கருத்துமாக நீதி தவறாது நடுநிலை வகிக்கின்ற நடுவர்களின் நடுநிலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டும். இது ஒவ்வொரு பெற்றோர்களும், ஆசிரியர்களும், போட்டியாளர்களும் கடைப்பிடிக்க வேண்டியதொன்று என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேடையில் நடுவர்களின் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. வன்னிமயில் போட்டியில் தமது மாணவர்களை பயிற்றுவித்து வன்னிமயில் போட்டியில் கலந்து கொள்ளவைத்த அனைத்து நடன ஆசிரியர்களும் அரங்கில் தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் மதிப்பளிக்கப்பட்டது.
போட்டிகள் நடைபெற்ற மூன்று நாட்களும் தேசவிடுதலை நினைவுகளுடன், மண்ணின் பெருமைகளுடன், நாளைய எமது நம்பிக்கை வாரிசுகளான எம் தேசத்தின் குழந்தைகளும், மக்களும் போட்டி நடைபெற்ற மூன்று நாட்களும் தாயக உணர்விலே மூழ்கிப்போயிருந்தனர் என்றே கூறலாம். பிரதம நடுவர், திருமதி. ஞானசுந்தரி அவர்கள் பின்வருமாறு அரங்கில் கூறியிருந்தார் விடுதலையை நெஞ்சில் சுமந்து இவ்வாறானதொரு நாட்டிய நிகழ்வு வேறு எங்கும் இவ்வளவு நிறப்பாக நடைபெறவில்லை என்றும், தான் இந்த போட்டியில் கலந்து கொண்டதையிட்டு பெருமை அடைகிறேன் என்றும், அதிலும் நடுவராக கடமையாற்றியது பெருமகிழ்ச்சி அடைவதாகவும் கூறியிருந்தார்.
இப்போட்டியில், மூன்று நாட்களும், பல சிரமங்களுக்கும் மத்தியிலும் எந்த வித எதிர் பார்ப்பும் இல்லாமல், நடுநிலை தவறாது நேர்த்தியாக திறமையாகவும் கடமையாற்றிய நடுவர்களை தமிழப் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி. சு.சுகந்தி அவர்கள் நினைவுச்சின்னம் வழங்கி மதிப்பளிப்பளித்திருந்தார்.
அன்றைய தினம், தமிழ் இளையோர் அமைப்பினரால் பனிவெளி ஆடல் நிகழ்வும் நடாத்தப்பட்டது. இரண்டு நிகழ்வுக்கும் (பனிவெளி ஆடல், வன்னிமயில்) பெரும் திரளான மக்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டது குறிப்படத்தக்கது.
இப்போட்டி சிறப்பாக நடைபெற பாரிசில் உள்ள வர்த்தநிலையங்களும் தமது பங்களிப்பை வழங்கியிருந்தனர். அத்துடன் மண்டப ஒழுங்கினை செவ்ரோன் தமிழ்ச்சங்கமும், ரி.ரி.என் தொலைக்காட்சி நிறுவனத்தினர் சிறந்த முறையில் புகைப்படம் எடுத்து உடனுக்குடன் வழங்கி இருந்தனர். ஒலி, ஒளி Royal Sound மண்டப அலங்காரம் Baby Ballon ஒளிப் பதிவினை KMS Video மிகவும் சிறப்பான முறையில் செய்தார்கள்.
மூன்று நாட்களும் கலைப்பண்பாட்டுக் கழகம் அறிவிப்பாளர்களான திரு.குருபரன், திருமதி. ஞானசீலி, திரு.கிருஸ்ணா, திரு.விநோச், திருமதி.கோபிகா ஆகியோர் குரல் ஆற்றுகையின் மூலம் போட்டி நிகழ்வுகளை மிகவும் உற்சாகமாக நடத்தி இருந்தனர்.
இந்நிகழ்வுக்கு, பிரான்சு தமிழர் கலைப்பண்பாட்டுக் கழகத்தினர் தமது முழமையான ஒத்துழைப்பினை வழங்கி இருந்தனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
இறுதியில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வன்னிமயில் விருதுக்குரியவரின் பெயர்; அறிவிக்கப்பட்டது. 2015 வன்னிமயிலாக செவ்ரோன் தமிழ்சோலையைச் சேர்ந்த மாணவி செல்வி.கணேசலிங்கம் கஜானி அவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அவர் நடன ஆசிரியர் திருமதி தனுஷா மகேந்திரராஐா அவர்களின் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கான வன்னிமயில் கிரீடம், பட்டி, வெற்றிக் கிண்ணம் சென்ற ஆண்டுகளில் வன்னிமயிலகளாக தெரிவு செய்யப்பட்ட மாணவிகளால் வழங்கப்பட்டது. மற்றும், வன்னிமயிலாக தெரிவு செய்யப்பட்ட செல்வி.கணேசலிங்கம் கஜானி அவர்களுக்கு, கேணல்.பரிதி அவர்களின் நினைவாக, அவர்களின் திருவுருவம் படம் பொறிக்கப்பட்ட தங்கபதக்கம் கேணல்.பரிதி அவர்களின் பெற்றோர்களாகிய, திரு.திருமதி நடராஜா தம்பதிகள் அணிவித்து மதிப்பளித்தனர். கேணல் பரிதி அவர்களின் நினைவு சுமந்த தங்கப்பதக்கத்தினை, கேணல் பரிதி அவர்களின் நண்பர்களாகிய முந்நாள் போராளிகள் கடந்த ஆண்டிலிருந்து வன்னிமயில் விருது பெறுபவருக்கு வழங்கி வருவது குறிப்பிடத் தக்கது.
இறுதியாக, தமிழ்ப் பெண்கள் அமைப்பு உறுப்பினரால் நன்றி உரையைத் தொடர்ந்து, எமது தாயக மந்திரமான நம்புங்கள் தமிழீழம் என்ற பாடலுடன், இரவு 9.00 மணியலவில் வன்னிமயில் 2015 நிகழ்வானது நிறைவுபெற்றது.
தாயகத்தில் துன்பதுயரத்தில் வாழும் எம் சகோதர உறவுகளின் துயர்துடைக்கும் கடமை புலத்தில் வாழும் ஒவ்வொரு தமிழீழ மக்களுக்குமுரிய தலையாய கடமையாகும். பிரான்சு தமிழப் பெண்கள் அமைப்பு இந்நிகழ்வின் மூலம் பெறப்பட்ட நிதியை ஒவ்வொரு ஆண்டும் தாயகத்தில் அல்லல்லுறும் பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கு வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2015 வெற்றிபெற்றவர்களும், பிரிவுகளும் பின்வருமாறு வன்னிமயில் 2015 வெற்றி பெற்ற போட்டியாளர்களின் விபரம்
◆ வன்னிமயில் 2015 : செல்வி கணேசலிங்கம் கஜானி
பாலர் பிரிவு
1. கலிஸ்டஸ் யுனெர்லின்
2. மோகனராஜா கிருத்திகா
3. nஐயதீபன் மதுரி –
சதீஸ்வரன் நிவேதா
கீழ்ப்பிரிவு (அ)
1. மகேந்திரராஜா பார்கவி
2. திருஞானம் யானுகா
3. வடிவேல் ஆரதி
கீழ்ப்பிரிவு (ஆ)
1. பத்மராஜா கோபிகா
2. சிறிதரன் அபிஷா
3. கேதீஸ்வரன் சுகிர்தா
கீழ்ப்பிரிவு (இ)
1. ஸ்ரீறங்கன் ஹரிணி
2. வசந்தகுமார் லேதிகா
3. மோகனராஜா சஐினா
கீழ்ப்பிரிவு குழு
1. கவின் கலையகம்
2. நர்த்தன விருக்ஷா
3. கலைவானி கலைக்கல்லுரி
மத்திய பிரிவு (அ)
1. கோவிந்தராஜா சௌந்தர்யா
2. வசந்தகுமார் லேனா
3. சாள்ஸ் ஆராதனா
மத்திய பிரிவு (ஆ)
1. பத்மராஜா லோஐிகா
2. சந்திரசேகரன் அபிலானா
3. ஆனந்தக்குமார் பிரியந்திக்கா
மத்திய பிரிவ (இ)
1. றஞ்சன் யான் பிறிந்தா
2. வசந்தகுமார் லெனிதா
3. முத்துத்தம்பி கஜினி – கந்தையா சுருதிகா
மத்திய பிரிவு (ஈ)
1. காணிக்கைநாதன் nஐhய்னோல்ட்
2. ஜெகநாதன் சில்வியா
3. சிறீதரன் சஞ்ஜித்தா
மத்திய பிரிவு குழு
1. ஆதி பரா சக்தி நாட்டிய பள்ளி
2. குசன்வில் தமிழ்ச்சோலை
3. செவ்ரோன் தமிழ்ச்சோலை
மேற்பிரிவு (அ)
1. குனபாலன் அதிசயா
2. குலநாதன் விவேக்கா
3. திருஞானசுந்தரம் ஆராதனி
மேற்பிரிவு (ஆ)
1. புஸ்பகரன் அட்ஷயா
2. ரசிகரன் அபிஷா
3. ஜெயசிங்கம் ஜெதுஷா
மேற்பிரிவு (இ)
1. லஐிந்திரன் சௌமியா
2. நல்லையா அதிசயா
3. மகேந்திரராஐா சாதனா
மேற்பிரிவு (ஈ)
1. லக்ஷ்மணன் சங்கவி
2. ஜெரோம் பெலாஐி
3. கிருபாகரன் சோபியா
மேற்பிரிவு குழு
1. குசன்வில் தமிழ்ச்சோலை
2. ஒல்னே சு புவா தமிழ்ச்சோலை
3. குசன்வில் தமிழ்ச்சோலை
அதி மேற்பிரிவு (அ)
1. சிவசுப்பிரமணியம் சபித்தா
2. தர்மகுலசிங்கம் தர்ஐிதா
3. சின்னத்துரை செல்சியா
அதி மேற்பிரிவு (ஆ)
1. சிறீகாந்தராசா தமிழருவி
2. சீராளன் திவியா
3. சதீஸ்வரன் நிதுஷா
அதி மேற்பிரிவு (இ)
1. செல்வரதன் ஜெனுசா
2. கேதீஸ்வரன் கெனிதவி
3. சந்திரபாலன் அட்சயா
அதி மேற்பிரிவு குழு
1. செவ்ரோன் தமிழ்ச்சோலை
2. ஆதி பராசக்தி நாட்டியப் பள்ளி
3. றான்சி தமிழ்ச்சோலை
அதி அதி மேற்பிரிவு
1. நிமால் ஜோன்சன் நிமாலினி
2. இராமநாதன் அனித்தா
3. முத்துராஐா சுவேத்திகா
சிறப்புப் பிரிவு
1. மாணிக்கா சரண்யா
2. சிறிரஞ்சன் ஆரணி
3. வினயசெல்வம் டஸ்சனா
ஆகியோர் பெற்றுக்கொண்டனர்