கூட்டு­ற­வுச் சங்க கட்­ட­டத்தை 15 வருடம் ஆக்­கி­ர­மித்­தி­ருந்த சிறீலங்கா இரா­ணு­வம் வெளி­யே­றி­யது!!

0
601

எதிர் வரும் ஐ நா கூட்டத்தொடரில் சிறீலங்கா அரசின் ஆக்கிரமிப்புக்கு எதிராக குற்ற சாட்டுக்கள் முன்வைக்கப்  படலாம் என்ற அச்சம் காரணமாக கண்துடைப்புக்கு சிறீலங்கா தனது படைகளை வெளியேற்றி வருகிறது. மன்­னார் பல­நோக்கு கூட்­டு­ற­வுச்­சங்கக் கட்­ட­டத்தை கடந்த 15 வரு­டங்­க­ளுக்கு மேலாக ஆக்­கி­ர­மித்­தி­ருந்த சிறீலங்கா இரா­ணு­வத்­தி­னர் நேற்­று (30.01.2018) அங்­கி­ருந்து வெளி­யே­றி­னர்.
குறித்த கட்­ட­டத்­தில் ஆக்கிரமித்து இருக்கும் சிறீலங்கா இரா­ணு­வத்­தி­னர் வெளி­யேற வேண்­டும் என தொடர்ச்­சி­யாக அழுத்­தங்­கள் கொடுக்­கப்­பட்டு வந்த நிலை­யில் நேற்­றை­ய­தி­னம் அங்­கி­ருந்து முழு­மை­யாக வெளி­யே­றி­யது.
நேற்­று­முன்­தி­னம் திங்­கட்­கி­ழமை மாலை மன்­னார் மாவட்­டச் செய­ல­கத்­தில் ஒருங்­கி­ணைப்­புக்­குழு கூட்­டம் நடை­பெற்­றது. வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சாள்ஸ் நிர்­ம­ல­நா­தன் மற்­றும் வடக்கு மாகாண அமைச்­சர் அனந்தி சசி­த­ரன் ஆகி­யோர் பல­நோக்கு கூட்­டு­ற­வுச்­சங்க கட்­ட­டத்­தில் உள்ள இரா­ணு­வத்தை அகற்­று­வது தொடர்­பில் கோரிக்­கை­களை முன்­வைத்­த­னர்.
எதிர்­வ­ரும் 10ஆம் திக­திக்கு முன்­னர் குறித்த கட்­ட­டத்­தில் இருந்து இரா­ணு­வத்­தி­னர் அகற்­றப்­ப­டு­வார்­கள் என கூட்­டத்­தில் கலந்­து­கொண்­டி­ருந்த சிறீலங்கா இரா­ணுவ அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­திருந்தார்.
இந்­த­நி­லை­யில் கடந்த 15 வரு­டங்­க­ளுக்கு மேலாக மேற்­படி கட்­டத்தை ஆக்­கி­ர­மித்­தி­ருந்த சிறீலங்கா இரா­ணு­வத்­தி­னர் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை காலை மன்­னார் பிர­தே­சச் செய­லா­ளர் எம்.பர­ம­தா­ச­னி­டம் பல­நோக்கு கூட்­டு­ற­வுச்­சங்கக் கட்­ட­டத்­தை கைய­ளித்து வெளி­யே­றி­னர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here