இரா­ணு­வம் இனப்­ப­டு­கொ­லை­களை செய்­தது என்று கூறு­வதே நியா­ய­மா­னது!

0
375

உள்­நாட்­டுப் போரில், தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக இழைக்­கப்­பட்ட கொடு­மை­கள் இனச்­சுத்­தி­க­ரிப்பே என்று ஐ.நாவின் முன்­னாள் பணி­யா­ள­ரான பென்­ஜ­மின் டிக்ஸ் கூறி­யுள்­ளார்.
இன்­றும் கூட தமி­ழர்­கள் பெரும்­பான்­மை­யாக வசிக்­கும் பிர­தே­சத்­தின் இனத்­து­வப் பரம்­பலை மாற்­றி­ய­மைக்­கும் நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அவர் கூறி­யுள்­ளார்.
விடு­த­லைப் புலி­க­ளின் கட்­டுப்­பாட்­டில் இருந்த வன்­னிப் பகு­தி­யில், 2004ஆம் ஆண்டு தொடக்­கம் 2008ஆம் ஆண்டு வரை­யான நான்கு வரு­டங்­கள், ஐ.நாவின் தொடர்­பா­டல் முகா­மை­யா­ள­ராக பென்­ஜ­மின் டிக்ஸ் பணி­யாற்­றி­யி­ருந்­தார். ஒரு சிறந்த ஒளிப்­ப­டக் கலை­ஞ­ரு­மான டிக்ஸ், இந்­தி­யா­வின் ஜெய்­பூர் நக­ரில் நடந்த ஜெய்­பூர் இலக்­கிய விழா­வில் பங்­கேற்­றி­ருந்­தார். அங்கு செய்தி நிறு­வ­னத்­துக்கு அவர் அளித்த செவ்­வி­யில் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார். அதில் அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது:
தாங்­கள் போர் குற்றங்களை இழைத்­த­தாக சிறீலங்கா இரா­ணு­வம் நம்­ப­வில்லை. தமிழ்த் தலை­மை­யி­டம் இருந்து அவர்­கள் தமி­ழர்­களை விடு­வித்­த­தாக, மேற்­கொள்­ளப்­ப­டு­வது வெறும் பரப்­புரை தான். அது விடு­தலை அல்ல, தமிழ்ச் சமூ­கத்­தின் அழிவு. இரா­ணு­வம் இனப்­ப­டு­கொ­லை­களை செய்­தது என்று கூறு­வதே நியா­ய­மா­னது.
நிகழ்ந்த கொடு­மை­கள் நிச்­ச­ய­மாக இனச் சுத்­தி­க­ரிப்பை நோக்கி நடத்­தப்­பட்­ட­வை ­தான். மகிந்த ராஜ­பக்ச ஆட்­சி­யில் தமி­ழர்­கள் இல்­கை­யில் இருப்­பதை விரும்­ப­வில்லை. நாட்டை விட்டு வெளி­யேற்ற முயன்­றி­ருக்­கின்­ற­னர்.
தமி­ழர்­களை வர­லாற்­றில் இருந்து அகற்­றும் கொடுமை அல்­லது பெயர்­களை மாற்­று­வது, அல்­லது வடக்­கில் சிறீலங்கா இரா­ணு­வம் சுற்­றுலா விடு­தி­க­ளை­யும், சுற்­று­லா­வை­யும் நடத்த அனு­ம­திப்­பது இன்­ன­மும் தொடர்­கி­றது. வடக்­கில் தமி­ழர்­களை வென்று விட்­ட­தான உணர்வு இன்­ன­மும் உள்­ளது.
வடக்­கில் இனப்­ப­ரம்­பலை மாற்­றி­ய­மைக்­கும் பெரும் நட­வ­டிக்­கை­கள் இன்­ன­மும் தொடர்­கின்­றன. ஆனால் கடந்த காலத்­தில் இருந்த நிலை­மை­க­ளு­டன் ஒப்­பி­டும் போது, இப்­போது குறிப்­பி­டத்­தக்­க­ளவு தளர்­வு­கள் ஏற்­பட்­டுள்­ளன.” என்று அவர் மேலும் தெரி­வித்­துள்­ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here