5 மாண­வர்­கள் கொலைக்கு நீதி கோரிப் புதிய பரப்­புரை!

0
390

திரு­கோ­ண­ம­லை­யில் தமிழ் மாண­வர்­கள் 5 பேர்­ப­டு­கொலை செய்­யப்­பட்­ட­மைக்கு நீதி­கோ­ரிப் புதிய பரப்­புரை ஒன்றை ஆரம்­பிக்­கத் திட்­ட­மிட்­டுள்­ளது பன்­னாட்டு மன்­னிப்­புச் சபை. 2006ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 2ஆம் திகதி 5 மாண­வர்­க­ளும் படு­கொலை செய்­யப்­பட்­ட­னர்.

இந்­தப் படு­கொ­லைக்கு நீதி கோரி “ட்ரிங்கோ பைவ்’ என்ற பரப்­பு­ரையை இன்­று­வரை பன்­னாட்டு மன்­னிப்­புச் சபை முன்­னெ­டுத்து வரு­கி­றது. தற்­போது புதிய மனு ஒன்­றில் கைச்­சாத்­தி­டும் பணி­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன என்று மன்­னிப்­புச் சபை தெரி­வித்­துள்­ளது.

இந்­தப் படு­கொலை தொடர்­பில், இரண்டு பொலிஸ் விசா­ர­ணைக் குழுக்­க­ளும், அரச தலை­வர் ஆணைக்­கு­ழு­வொன்­றும்  விசா­ர­ணை­களை முன்­னெ­டுத் தி­ருந்­தன. ஆனால் சம்­ப­வம் தொடர்­பில் எவ­ருக்­கும் எதி­ராக வழக்­குத் தாக்­கல் செய்­யப்­ப­ட­வில்லை.

“இந்­தப் படு­கொலை தொடர்­பில் இலங்கை அரசு ஆக்­க­பூர்­வ­மான விசா­ர­ணை­களை மேற்­கொண்டு, சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­ன­ருக்கு எதி­ராக வழக்­குத் தொடர வேண்­டும். இத­னூ­டா­கப் படு­கொலை செய்­யப்­பட்ட மாண­வர்­க­ளின் குடும்­பங்­கள் நீதி­யைப் பெற­லாம்’’.- என்று மன்­னிப்­புச் சபை தெரி­வித்­துள்­ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here