கடந்த பத்து வருட காலத்தில் வெளிநாட்டிலிருந்து பத்து ரில்லியன் ரூபா அதாவது, ஒரு இலட்சம் கோடி ரூபா கடனாகப் பெறப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் ஒன்பது ரில்லியன் ரூபாக்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. என சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
திறைசேரியில் இதற்கு ஓர் ஆதாரமும் இல்லை. கணக்கும் இல்லை. அமைச்சரவையில்கூட முழு வெளிநாட்டுக் கடன் எவ்வளவு பெற்றிருக்கிறோம் எனக் கேட்டுள்ளேன். ஆனால் பதில் இல்லை என்றும் திறைசேரியின் அனுமதியின்றி அரசின் அனுமதியின்றி அந்தப் பணம் தனியார் நிறுவனங்களுக்குச் சென்றுள்ளது. மிகவும் நுட்பமாக இது நடந்துள்ளது. அரசின் வருமானம், பொருளாதாரம் வீழ்ச்சியடைய இதுவும் ஒரு காரணம். வெளிநாட்டுக் கடன்கள் குறித்து வரவு – செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டாலும் அவற்றுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை.
இவற்றுக்கும் ஆணைக்குழுக்களை நியமிப்பதா? ஆணைக்குழுக்களை நியமிப்பதற்கு அளவில்லையா? இவற்றுக்கு ஒரு தீர்வைக் காணவேண்டும்’’ என்று மேலும் தெரிவித்துள்ளார்.