பிரான்சின் பலமாவட்டங்களில் பெய்த தொடர் மழையின் பாதிப்பு பரிசின் சென் நதியில் நீர்மட்டம் 5.62 மீற்றரை எட்டியது!

0
324


நேற்று (26) மாலை 17.00 மணிக்கு பெறப்பட்ட அளவீட்டின் படி சென் நதியின் நீர்மட்டம் 5.62 மீற்றரை எட்டியுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து இப்படியே இருந்தால் 6.20 மீற்றர் வரை செல்லலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் 6.10 மீற்றர் வரை சென்றிருந்தது. 1910 ஆம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு 8.62 மீற்றர் வரை சென்றிருந்தாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
பரிசின் புறநகர்ப் பகுதியான வில்நெவ் சென்ஜோர்ஜ் (Villeneuve-Saint-Georges)பகுதியில் கடந்த 2016 இல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அந்த வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட தமது வீடுகளை சீரமைத்து முடிந்து சிறிது காலத்தில் (17 மாதங்களின் பின்னர்) இரண்டாவது தடவையாக தாம் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப் பட்டுள்ளதா அப்பகுதி மக்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.
இயற்கை அனர்த்தால் 62 இலட்சம் மக்களின் மின்சார இணைப்புத் துண்டிக்கப் பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here