யாழ்.ஆனைக்கோட்டை பகுதியில் தனிமையில் வசித்த மூதாட்டியை அடித்து கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஆனைக்கோட்டை பகுதியில் வசித்த ஜெகநாதன் சத்தியபாமா (வயது 72) எனும் மூதாட்டி அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். அதன் போது அவர் அணிந்திருந்த மோதிரம் மற்றும் தோடுகள் என்பன காணாமல் போயிருந்தன.
அதனால் குறித்த கொலை கொள்ளை நோக்குக்காக நடைபெற்று இருக்கலாம் எனும் சந்தேகத்தில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
அந்நிலையில் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 24 வயதிற்கு உட்பட மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றார்கள்.