இலங்­கையின் பொறுப்­புக்­கூறல் 6 மாத காலப்­ப­கு­தியில் வெளிக்­கொணரப்­படும்:டேவிட் கமரூன்

0
287

Cameronஇலங்­கையின் பொறுப்­புக்­கூறல் விட­யங்கள் மீண்டும் 6 மாத காலப்­ப­கு­தியில் வெளிக்­கொண்­டு­வ­ரப்­படும் என்று பிரிட்டன் பிர­தமர் டேவிட் கமரூன் தெரி­வித்­துள்ளார்.

இலங்­கையின் புதிய அர­சாங்கம் மனித உரி­மைகள் விட­யத் தில் ஐக்­கிய நாடு­க­ளுடன் இணைந்து செயற்­படும் என்ற நம்­பிக்­கை­யி­லேயே மேல­திக காலம் வழங்­கப்­பட்­டுள்­ளது

என பிரிட்டன் பிர­தமர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

2013ஆம் ஆண்டு இலங்­கையின் யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்­த­போது அங்கு பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் பொறுப்­புக்­கூ­ற­லுக்­கான தேவை­யுள்­ள­மையை தாம் வலி­யு­றுத்­தி­ய­தா­கவும் டேவிட் கமரூன் கூறி­யுள்ளார்.

தமிழ் காடி­ய­னுக்கு அனுப்­பி­யுள்ள எழுத்­து­மூல அறிக்கை ஒன்றில் பிரிட்டன் பிர­தமர் இந்த விட­யங்­களை குறிப்­பிட்­டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது

இலங்கை தொடர்­பான விசா­ரணை அறிக்கை சமர்ப்­பிப்­பதை 6 மாதங்­க­ளுக்கு பிற்­போட்­ட­மையை இலங்­கையின் எதிர்­காலம் கரு­திய ஒவ்­வொ­ரு­வரும் வர­வேற்­க­வில்லை. குறிப்­பாக தமக்கு நீதி மறுக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறும் வடக்கு கிழக்கு மக்கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை.

எனினும் இலங்­கையின் புதிய அர­சாங்கம் குறித்த மனித உரி­மைகள் விட­யத்தில் ஐக்­கிய நாடு­க­ளுடன் இணைந்து செயற்­படும் என்ற நம்­பிக்­கை­யி­லேயே மேல­திக காலம் வழங்­கப்­பட்­டுள்­ளது

தமிழ் மக்கள் மத்­தியில் புதிய அர­சாங்கம் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்ப வேண்டும். இரா­ணுவ சூன்ய நிலை ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். இரா­ணுவம் பிடித்து வைத்­தி­ருக்கும் காணிகள் பொது­மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­ப­ட­வேண்டும்

இந்­த­நி­லையில் போரினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை தாம் 2013ம் ஆண்டு யாழ்ப்­பா­ணத்தில் சந்­தித்த முகங்­களை தம்மால் மறக்க முடி­யாது.

எனவே எதிர்­வரும் செப்­டம்பர் மாதம் ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் ஆணை­யாளர் இலங்கை தொடர்பில் வெளியிடவுள்ள அறிக்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல்கள் அடங்கியிருக்கும். இதன்போது இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவும் விருத்தியடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here