பிரான்சு சுவசி லு றுவா பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் 8 வது ஆண்டுவிழா !

0
320

 

பரிசின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான சுவசி லு றூவா தமிழ்ச் சோலையின் 8 வது ஆண்டுவிழா கடந்த 20.01.2018 சனிக்கிழமை மாநகரசபை மண்டபத்தில் சிறப்பாக இடம் பெற்றது. பிற்பகல் 14.30 மணிக்கு வரவேற்பு ஒளி ஏற்றி வைக்கப்பட்டது.
மங்கல விளக்கினை மாநகர முதல்வர் Mr Didier Guillaume , உதவி முதல்வர் Mme Benkahla , பொறுப்பாளர்கள் மற்றும் தமிழர் பிரதிநிகள் ஏற்றிவைத்தனர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து. மாணவர்களால் தமிழச்சோலைக்கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து மாநகர முதல்வர் மற்றும் முக்கியஸ்தர்கள் பொன்னாடை போத்தி மதிப்பளிக்கப்பட்டனர்.

வரவேற்புரை பிறங்கோ தமிழ்சங்கத் தலைவர் திரு. Hyginus ALOYSIUS அவர்கள் ஆற்றியிருந்தார்.


அரங்க நிகழ்வுகளாக ; தொடர்ந்து மாவீரர் வணக்கப்பாடல் நடனம்,தமிழ்மொழியிலான அபிநயப்பாடல், கதைப்பாடல், சிறுவர் பாடல், ஆங்கிலப்பேச்சு, தாளலயம், கீர்த்தனம், வில்லிசை, கிராமிய நடனம், வாத்தியஇசை, காத்தவராயன்கூத்து போன்ற 28 நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன. மாணவர்களின் ஆக்கங்கள் கொண்ட நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
எமது பாரம்பரிய கலாச்சார கூத்து நாடகம் ( காத்தவராயன் ) மாணவர்களால் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்ச்சங்க கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு. பாலகுமார், திரு. விசுவநாதன் அவர்களும் சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளித்திருந்தனர்.


தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் திரு. மேத்தா அவர்கள் சிறப்புரை ஆற்றினார். பிராங்கோ தமிழச்சங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் ஆரம்பத்திலேயே எழுதப்பட்ட வாக்கியம் தமிழை வளர்க்க தமிழில் பேசுவோம் என்ற வாக்கியமே போதும் இந்த சுவசி லு றுவா பிறாங்கோ தமிழ்சங்கத்தின் தமிழ்மீது கொண்டுள்ள பற்றுதல் என்றும், இன்று அவுஸ்ரேலியா, கனடா போன்ற நாடுகளும், அமெரிக்கா வெர்ஜினியா மாநிலமும், ஜோர்ஜியாவும், பிரித்தானியாவும் தமிழ்மொழியை தமது அரசுமொழிகளில் ஒன்றாகவும், தமிழர் திருநாளாம் தைப்பொங்கலினை தமிழர் நாளாக பிரகடனப்படுத்தியதும், வாழ்த்துவதுமாக இருக்கின்ற இவர்களுக்கு தங்கள் கண்முன்னால் உலகின் மூத்த இனங்களில் ஒன்றாகவுள்ள தமிழர்கள் அழிக்கப்படும்போது நாம் அவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏன் இதுவரை தோன்றவில்லை என்பதை கேட்டதோடு எமது இனத்தை நாமேதான் தான் காப்பாற்ற வேண்டும். எதிர்காலத்தில் எமது இளைய சந்ததியினர் நிச்சயம் செய்வார்கள் என்பதையும் அதுவரை எமக்கிழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி வேண்டி தொடர்ந்து சர்வதேசத்தின் கதவுகளைத்தொடர்ந்து தட்டவேண்டும் என்றும் எதிர்வரும் மார்ச் 12ம் நாள் நடைபெறவுள்ள நீதிக்கான பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


நிகழ்வுகள் யாவும் நம்புங்கள் தமிழீழம் பாடலுடன், தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைபெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here