முல்லைத்தீவு – நாயாறு பகுதியில் சிங்களவரை குடியமர்த்த முயற்சி !

0
322

முல்லைத்தீவு – நாயாறு பகுதியில் தெற்கில் இருந்து சிங்கள மீனவர்கள் 300 பேர் அழைத்து வரப்பட்டு அப் பகுதியில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை அநீதியானது என, அப் பிரதேசத்திலுள்ள தமிழ் மீனவர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
சிங்கள மீனவர்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்க தேவையான நிலங்களைப் பெற, நில அளவைத் திணைக்களத்தினர் அந்தப் பகுதிக்கு சென்றிருந்த போதே, அங்கு பாரம்பரியமாக வசித்து வரும் மீனவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மீனவர்களிடையேயும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
மக்களின் எதிர்ப்பினை அடுத்து நிலம் அளவிடும் நடவடிகைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், பெரும் எண்ணிகையில் சிறீலங்கா காவல்துறையினர் அப் பகுதியில் குவிக்கப் பட்டுள்ளனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here