பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான ஆர்ஜொந்தே நகர பிறங்கோ தமிழ்ச்சங்கம், நடாத்திய தைப்பொங்கல் புதுவருட விழா கடந்த 21.01.2018 ஞாயிற்றுக்கிழமை வெகுசிறப்பாக இடம் பெற்றது.
காலை10.30 மணிக்கு மாநகர முதல்வர் , உதவிமுதல்வர் , முந்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர், மூத்தோர்களுடன் தமிழ்ச்சோலை மாணவர்களும் ஆசிரியர்களும் பங்குபற்றி சிறப்பித்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட மாநகர முதல்வர் ஜோர்ஜ்மொன்துறோ , மாநகரசபை உதவிமுதல்வர் , முந்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் பிலிப் பூசே, இளையவர்கள் அனைவரும் தமிழர் கலாசார பண்பாட்டு உடையான வேட்டி, சால்வையை அணிந்து சிறப்பித்ததோடு பொங்கல் பானையில் அரிசியும் இட்டிருந்தனர்.
பொங்கல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இளையவர்கள் கிராமிய பாடல் நடனங்களையும், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான நினைவுகளை ஒன்றுசேர்த்து செயற்படுத்தும் முட்டியுடைத்தல் விளையாட்டும் இடம் பெற்றன.
மண்டப நிகழ்வாக பெண்கள் ஆண்களுக்கான கோலப்போட்டியும் . கிராமிய நடனங்கள், எழுச்சிப்பாடல் நடனங்கள், கவிதை, பொங்கல் சிறப்புரை, தமிழ்ச்சோலை போட்டியிட்டவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிப்புச் செய்யப்பட்டதோடு இளையவர்களால் சிறப்புப் பட்டிமன்றம் இடம் பெற்றது.
சிறப்புரையில் எமது பாரம்பரியமும், பண்பாடுகளும் பேணிப்பாதுகாத்து பாதுகாப்பதுடன், அடுத்த சந்ததிக்கு எடுத்துச்செல்கின்ற நாம் எமது தாயக மக்களையும், அவர்களுடைய சனநாயக ரீதியிலான போராட்டத்திற்கு கரம் கொடுத்து வலுச்சேர்க்க வேண்டியவர்களாக புலம்பெயர்ந்த தமிழர்கள் நாம் இருக்கின்றோம் என்பதைச்சுட்டிக்காட்டி . புலத்தில் அதனுடைய ஓர் களமே எதிர்வரும் மார்ச் மாதம் 12ம் நாள் ஜெனீவா மனிதவுரிமைகள் செயலகம் முன்பாக நடைபெறவுள்ள நீதிக்கான பேரணியில் வலுச்சேர்க்க வேண்டும் என்றும தெரிவிக்கப்பட்டது, அதற்காக பிரான்சு பாரிசிலிருந்து தொடரூந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதையும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பொங்கலுடன் அறுசுவை உணவுகள் அனைவரும் ஒன்றாக உண்டு மகிழ்ந்தனர். பொங்கல் நிகழ்வு பிற்பகல் 3.00 மணியளவில் எமது நம்பிக்கையின் பாடல் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலோடு, தமிழர்களின் தாரக மந்திரமாம் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் கேசத்துடன் இனிதே நிறைவு பெற்றன.