தேர்தல் காலத்தில் கொலை, கொள்ளை போன்ற சமூகவிரோத செயற்பாட்டு குற்றங்களுக்கு பிணை வழங்க முடியாதென யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் தேர்தல் வன்முறையோடு தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்படும் வேட்பாளரானாலும் சரி, வாக்காளரானாலும் சரி அந்த நபருக்கு தேர்தல் நிறைவடையும் வரை பிணை வழங்கப்படமாட்டாது.
தேர்தல் ஆணைக்குழு ஜனநாயக ரீதியான தேர்தலை நடத்தும் வகையில் செயற்பட்டு வருகின்ற நிலையில், அதற்கு ஒத்துழைக்கும் வகையிலும் ஜனநாயக ரீதியான தேர்தலொன்றை நடத்துவதற்கு ஒத்துழைக்கும் வகையிலும் தேர்தல் கடமையில் ஈடுபடும் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலும் இவ்வாறு தேர்தல் நிறைவடையும் வரை குற்றமிழைத்தவர்களுக்கு பிணை வழங்கப்படாதென நீதிபதி மேலும் தெரிவித்தார்.
54 கிலோ கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபருக்கான பிணை விண்ணப்பத்தின் மீதான விசாரணையின்போதே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டிய நீதிபதி இளஞ்செழியன், குறித்த பிணை விண்ணப்பத்தினை ஒத்திவைத்தார்.