சிறீலங்கா பயங்கரவாதச் சட்டத்தை உடனடியாக நீக்க ஐரோப்­பிய ஒன்­றி­யம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது!!

0
190

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை உட­ன­டி­யாக நீக்­கு­வ­தற்கு சிறீலங்கா அரசு அவசர நட­வ­டிக்­கை­கள் எடுக்க வேண்­டும் என்று ஐரோப்­பிய ஒன்­றி­யம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.
கொழும்­பில் நேற்­று­முன்­தி­னம் (20)நடந்த ஐரோப்­பிய ஒன்­றி­யத்­துக்­கும் சிறீலங்கா விற்கும் இடை­யி­லான 21 ஆவது கூட்­டுக் குழுக் கூட்­டத்­தி ­லேயே, இவ்­வாறு வலி­யு­றுத்­தப்­பட்டது.
இந்­தக் கூட்­டத்­தில் கருத்து வெளி­யிட்ட ஐரோப்­பிய ஒன்­றி­யப் பிர­தி­நி­தி­கள், பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­கு­வ­தற்­கும், பன்­னாட்­டுத் தர­நி­ய­மங்­க­ளுக்கு ஏற்ற புதிய சட்­டத்தை கொண்டு வரு­வ­தற்­கும் அவ­சர நட­வ­டிக்­கையை சிறீலங்கா அதி­கா­ரி­கள் எடுக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­­னர்.
பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள எஞ்­சிய கைதி­க­ளின் பிரச்­சி­னையை கூடிய விரை­வில் தீர்ப்­பது குறித்­தும் இந்­தக் கூட்­டத்­தில் கலந்­து­ரை­யா­டப்­பட் டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here