கதிர்காமம் நகரில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்ரபல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேநபரை திஸ்ஸமஹராம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இதேவேளை, துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கதிர்காமம் நகரத்தில் கட்டளையை மீறி பயணித்த மோட்டார் சைக்கில் மீது நேற்றிரவு 11 மணியளவில் பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்
துப்பாக்கி பிரயோகத்தின் பின்னர் கதிர்காமம் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சிலர் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதன்போது கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கதிர்காமத்தை சேர்ந்த 44 வயதான ஒருவரே துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
கதிர்காமத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் தொடர்பான விசாரணைகளுக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைய அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் அமைதியின்மையை தோற்றுவித்து, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதேவேளை,துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை திஸ்ஸமஹராம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கதிர்காமம் நகரத்தில் கட்டளையை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது நேற்றிரவு 11 மணியளவில் பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
துப்பாக்கி பிரயோகத்தின் பின்னர் கதிர்காமம் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சிலர், கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதன்போது மக்களை களைப்பதற்காக கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கதிர்காமத்தை சேர்ந்த 44 வயதான ஒருவரே துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தார்.
பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்து பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் 12 பெண்கள் உள்ளிட்ட 59 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிப்பிரயோகத்தை கண்டித்து நேற்றிரவும் எதிர்ப்பில் ஈடுப்பட்ட மக்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.