கொடிகாமம் பகுதியில் துப்பாக்கி முனையில் பணக் கொள்ளையில் ஈடுபட்ட இருவரை கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பகுதியில் இவர்கள் மறைந்திருந்தமை தொடர்பாக கொடி காமம் பொலிஸ் நிலையத்தின் புலனாய்வு அதிகாரி கே.தினேசுக்கு கிடைக்கப்பட்ட தகவலின் அடிப் படையிலேயே மேற்படி கைது நட வடிக்கையானது இடம்பெற்றுள் ளது. இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவரு வதாவது,
நேற்று முன்தினம் இரவு ஏறா வூரில் இருந்து தம்பதிகள் காரில் யாழ்.நோக்கி சென்ற போது
போது அவர்கள் பயணித்த காரானது கொடிகாமம் புத்தூர் சந்திக்கு அண்மையில் பழுதடைந்துள்ளது. இதன்போது காரில் வந்தவர்கள் சக்கரத்தை கழற்றி மற்றைய சக்கரத்தை பழுது பார்த்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர்களிடம் கைத்துப்பாக்கியை காண்பித்து மிரட்டியுள்ளனர்.
அத்துடன் அவர்களது உடமையில் இரு ந்த 5 இலட்சம் ரூபா பணம் மற்றும் 6 பவுண் நகை என்பவற்றை கொள்ளையிட்டு சென்று ள்ளனர். இதனையடுத்து குறித்த தம்பதிகள் கொடிகாமம் பொலிஸாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையிலும் கொள்ளை யர்களின் அடையாளங்கள் தொடர்பாக வழ ங்கிய தகவல்களின் அடிப்படையிலும் மேற் கொள்ளப்பட்ட விசாரணைகளினூடாக கொள் ளையில் ஈடுபட்ட இருவரும் கைது செய்யப் பட்டனர்.
கொடிகாமம் பகுதியில் வீடொன்றில் மறை ந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்ட இவ் இருவரில் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற கஞ்சா கடத்தல் தொடர்பில் தேடப்பட்ட நபர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.இதேவேளை கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ச்சியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதா கவும் அதனை தொடர்ந்து அவர்களை சாவ கச்சேரி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கொடிகாமம் பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.