யுத்தம் நிறைவடைந்து நீண்ட காலமாகியும் வடக்கில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிலை கொண்டிருப்பது தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பு என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
யுத்தம் இல்லாத காலத்தில் இராணுவத்தினர் வடக்கில் தங்கியிருப்பதால் தமிழ் மக்களுக்கு சொந்தமான பாரிய நிலப்பரப்பு அவர்களுக்கு இல்லாமல் போயுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எந்தவொரு காரணமும் இன்றி இராணுவத்தினர் அங்கு தங்கியிருப்பதால் அப் பகுதிகளிலுள்ள பெண்களின் சுதந்திரத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் இதனால் அவர்கள் நாளாந்தம் பயம் மற்றும் சந்தேகத்துடனேயே வாழ்வதாகவும் கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் கலாச்சாரத்திற்கு இராணுத்தினர் தொடர்ந்தும் தங்கியிருப்பது பொருந்தாது என சுட்டிக்காட்டிய ஆனந்த சங்கரி, எந்தவொரு காரணமும் இன்றி அவர்கள் அங்கிருப்பதை தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Home
ஈழச்செய்திகள் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பது அன்றாட வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பு என்கிறார் ஆனந்த சங்கரி !