வவுனியா – குருமன்காடு பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ள னர். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
தைப்பொங்கலை கொண்டாடுவதற்கு பயணித்து கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
அதிவேகம் காரணமாக நேற்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 20 மற்றும் 21 வயதுடைய இளை ஞர்களே இதன்போது உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
வவுனியா நகரப் பகுதியில் இருந்து புகை யிரத நிலைய வீதி ஊடாக வைரவப்புளி யங்குளம் நோக்கி பயணித்த மோட்டார் கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலை யில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.20 அளவில் வீதியின் அருகாமையில் இருந்த கற்குவியலிலும் மற்றும் கம்பத்துட னும் மோதுண்டு விபத்துக் குள்ளாகியுள்ளது.
இந்த மோட்டார் காரில் 4 பேர் பயணி த்த நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 படுகாயமடைந்த நிலையில் வீதியால் சென்ற பொது மக்களினாலும் மற்றும் பொலி ஸாரினாலும் மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்துச் சம்பவத்தின் போது இல. 36ஃ1, புகையிரத நிலைய வீதி வைரவப்புளி யங்குளம் வவுனியாவைச் சேர்ந்த இரா ஜேந்திரன் – பிரபாத் (வயது 21) என்ற இளை ஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்,
மேலும் 3 பேர் படுகாயமடைந்த நிலை யில் மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங் கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுக் காலை வேளையில் கணேசபுரம் வவுனியா என்ற முகவரியைச் சேர்ந்த சந் திரகுமார் – சாந்தப் பிரகாஸ் (வயது 20) என்ற இளைஞனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்,
இச்சம்பவத்தின் போது படுகாயமடைந்த நிலையில், ஒயார் சின்னக்குளம் வவுனியா என்ற முகவரியைச் சேர்ந்த எம்.விதுசன் (வயது 20) என்பவரும்,சாஸ்திரி கூமாங்கு ளம் வவுனியா என்ற முகவரியைச் சேர்ந்த கதிர்காமநாதன் சசிகரன் (வயது 22) ஆகி யோர் தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சை அளி க்கப்பட்டு வருவதாக வவுனியா பொலிஸ் நிலையத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.