அமெரிக்காவிற்கு அளித்து வந்த புலனாய்வு மற்றும் இராணுவ ஒத்துழைப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
பயங்கரவாத குழுக்களை சமாளிக்க பாகிஸ்தான் தவறிவிட்டதாகக் கூறி அந்நாட்டிற்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு உதவிகளை முழுவதுமாக அமெரிக்கா நிறுத்துயதையடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் குர்ரம் குர்ராம் டஸ்கிர் கான் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக போர் தொடுப்பதில் தன் முழு கடமையை பாகிஸ்தான் ஆற்றியுள்ளதாக குறிப்பிட்ட குர்ரம், அமைதியை நிலைநாட்ட தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தானை அச்சுறுத்துவதை தவிர்த்து, தங்களுடனான பேச்சுவார்த்தையை அமெரிக்கா புதுப்பிக்க வேண்டும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். அமெரிக்காவுடன் பாகிஸ்தான் ஒத்துழைத்த காரணத்தினாலேயே அல் கொய்தா அமைப்பை அகற்ற முடிந்ததாகவும் குர்ரம் தெரிவித்தார்.
முன்னதாக, ஆப்கான் தாலிபான் மற்றும் ஹக்வானி குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் வரை அந்நாடு மீது விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்திருந்தது.
Home
உலகச்செய்திகள் பாகிஸ்தானை அச்சுறுத்துவதை தவிர்த்து, பேச்சுவார்த்தையை அமெரிக்கா புதுப்பிக்க வேண்டும் !