தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கண்டனம் தெரிவித்து வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி 324 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரனின் படம் பதாகையில் பிரதானப்படுத்தப்பட்டுள்ளதுடன் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் , பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் ஶ்ரீதரனின் படங்களும் காட்சிப்படுத்தப்பட்டு துரோகிகள் என வார்த்ததைகளால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.
இதே பதாகையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களின் படங்களும் காட்சிப்படுத்தப்பட்டு சிவசக்தி ஆனந்தன் தவிர்ந்த ஏனைய உறுப்பினர்களின் வாய்கள் மறைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் படங்களை காட்டி தமது எதிர்ப்பினை வௌிப்படுத்தினர்.