தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் இரண்டாம் ஆண்டுக்கான தமிழ் மாணி பட்டயக்கல்விக்கான தேர்வு கடந்த 07.01.2018 அன்று நெதர்லாந்து, பிரித்தானியா,பிரான்சு,இத்தாலி, நோர்வே,டென்மார்க் ஆகிய நாடுகளில் மிகச் சிறப்பாக நிறைவடைந்துள்ளது.
இப் பட்டயக் கல்வியானது கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் அணியஞ் செய்யப்பட்ட வளர்தமிழ் 1 தொடக்கம் வளர்தமிழ் 12 வரையிலான பாடநூல்களின் விரிவான பாடத்திட்டங்களை உள்ளடக்கியுள்ளதோடு ஈழத்தின் உண்மைத் தன்மையைக் கூறும் வரலாற்று நூல்களையும் மாமன்னன் இராவணனின் புகழ்பாடும் இராவணகாவியம், கழகக்கால நூல்கள், இலக்கணம் முதலிய நூல்களையும் உள்ளடக்கியுள்ளது.
புலம்பெயர் நாட்டில் 14 நாடுகளை தன்னகத்தே உள்வாங்கி கல்வி மேம்பாட்டுப் பேரவையால் அணியஞ் செய்யப்பட்ட நூல்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் வளர்தமிழ் 12 ஆம் வகுப்பினை நிறைவு செய்த மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏதுவாய் இத் தமிழ் மாணி பட்டயக் கல்வியானது அமைந்துள்ளது எனத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.