சூரியனைப் போன்று கடுமையான வெப்பத்துடன் கூடிய புதிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு!

0
222

சூரியனைப் போன்று கடுமையான வெப்பத்துடன் கூடிய புதிய நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அது பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
சூரியனைப் போன்றே அளவும், பரப்பளவும் கொண்டுள்ளது. சூரியனின் வயதையொத்தது.
இந்த நட்சத்திரம் ரோசட்டா கல் போன்ற வடிவில் உள்ளது.
சூரியனைப் போன்றே கடுமையான வெப்பத்தை வெளியிடுகிறது. ஆனால் அதில் உள்ள இரசாயனப் பொருட்களின் அளவு மட்டும் வேறுபடுகின்றது. சூரியனில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற இரசாயனப் பொருட்கள் அதிகளவில் உள்ளன.
ஆனால், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நட்சத்திரத்தில் இவை 2 மடங்கு உள்ளன. இது வெளியிடும் வெப்பம் மற்றும் இரசாயனப் பொருட்களால் பூமியின் தட்பவெப்ப நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, பருவ நிலை மாற்றம் ஏற்படுகிறது.
இத்தகவலை டென்மார்க் ஆர்கஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கிறிஸ்டோபர் கரோப் தெரிவித்துள்ளார்.
கெப்லர் விண்கலம் அனுப்பிய புகைப்படங்கள் மற்றும் தகவல் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் இவை தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here