உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் 44 ஆவது நினைவுதினம் இன்று (10) காலை யாழ் முற்றவெளி மைதானத்தில் தமிழாராச்சி படுகொலை நினைவு தூபியின் முன்னால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தி நினைவு கூரப் பட்டது.
1974ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மகாநாட்டின் இறுதி நாள் அன்று பெரும்திரளான மக்கள் கூடியிருந்தனர். அன்றைய சிறிமாவோ அரசு தனது காவல் துறையை ஏவி படுகொலையினை அரங்கேற்றியது. அந்த வன்முறையில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் படுகாயங்களுக்கு உள்ளாகினார்கள்.