முல்லைத்தீவு மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள் ளது. முல்லைத்தீவில் கடந்த இரண்டு மாதங்களில் வைரஸ் காய்ச்சலால் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூறு வரை யான நோயாளர்கள் சிகிச்சை பெற் றுள்ளார்கள்.
இந்நிலையில் நேற்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குமுழமுனையினை சேர்ந்த 74 அகவையுடைய எம்.பாக்கியம் என்ற வயோதிபர் கடந்த மூன்று வாரங்களாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, காய்ச்சலுடன் இரவு படுக்கைக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் குருநகர் பகுதி யில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான பெர் னான்டோ ஜோன் அன்டனி (வயது 57) என்பவரே மேற்படி உயிரிழந்த வராவர்.
குறித்த நபர் நேற்று முன்தினம் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். அன்றைய தினம் மருந்தை உட்கொண்டு விட்டு இரவு 10 மணிக்கு படுக்கைக்கு சென்றுள்ளார்.
காலை அவருடைய மனைவி குறித்த நபரை எழுப்பும்
அவர் அசைவின்றி இருந்துள்ளார். உட னடியாக யாழ்.போதனா வைத்தியசாலை க்கு கொண்டு வந்து சேர்த்த போது இவரை பரிசோதித்த வைத்தியர்கள் இவர் மாரடை ப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.
இந்த மரண விசாரணையை யாழ் போதனா வைத்தியசாலை மரண விசா ரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார்.