பரிசில் நேற்று வெள்ளிக்கிழமை (05.01.2018) காலை 10.30 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குர்திஸ்தான் மக்கள் பிரதிநிதிகளும், சட்டவாளர்களும், தமிழர் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட செய்தியாளர் சந்திப்பில்.
2013 ஆம் ஆண்டு பாரிசில் படுகொலை செய்யப்பட்ட குர்திஸ்தான் மக்கள் பிரதிநிதிகளான மூன்று பெண்கள் குறித்த விபரங்கள் தெரிவித்து. இக் கொலைகளின் குற்றவாளிகள் இனம்காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் படுகொலை செய்யப்பட்ட நாளில் இருந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக் தாம் அதற்காக போராடி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இவ்விதமே ஈழத்தமிழரின் உரிமைக்காக பாடுபட்டு பிரான்சு மண்ணில் படுகொலைசெய்யப்பட்ட லெப்.கேணல் நாதன் மற்றும் ஈழமுரசு பத்திரிகையின் நிறுவக ஆசிரியர் கப்டன் கஜன் ஆகியோரின் படுகொலைக்கு 21 ஆண்டுகளாக நீதி கிடைக்கவில்லை என்பதையும், 2012 இல் படுகொலைசெய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை என்பதையும் தமிழர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
சனநாயவழியில் இனத்தின் விடுதலைக்காக குரல் கொடுத்தவர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை நீதிக்கான போராட்டங்கள் தொடரும் என்பதை அங்கிருந்த பிரதிநிதிகள் தெரிவித்தனர்.