தென் அமெரிக்க நாடான பெருவில் மலைப் பாதையொன்றில் சென்று கொண்டிருந்த பஸ் உருண்டு வீழ்ந்ததில் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெரு நாட்டின் தலைநகர் லீமாவை நோக்கி, ஹுவாச்சோ நகரிலிருந்து 55 பயணிகளுடன் பயணித்த பஸ் ஒன்றே விபத்திற்குள்ளாகியது.
இந்த விபத்து கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
கடலையொட்டிய மலைப்பாதை வழியாக பயணித்துக்கொண்டிருந்த போது, ”சாத்தான் வளைவு” எனப்படும் அபாயகரமான திருப்பத்தில் நிலை தடுமாறி பஸ் வீழ்ந்துள்ளது.
சுமார் 100 அடி பள்ளத்தில் கடற்கரை பாறைகளின் மீது தலைகீழாக உருண்டு வீழ்ந்ததில் பஸ் முற்றிலுமாக நொறுங்கியுள்ளது.
பஸ் வீழ்ந்த பகுதியில் கடலலைகள் அதிகரித்துள்ளதால் மீட்புப் பணிகளை இரவில் நிறுத்திவிட்டு பின்னர் நேற்று காலை ஆரம்பித்துள்ளனர்.
கடலின் நீர்மட்டம் மீண்டும் அதிகரிப்பதற்குள் மீட்புப் பணிகளை நிறைவேற்றுவதற்காக பெரு நாட்டுக் கடற்படை தமது படகுகள் மூலம் மீட்புக் குழுவினரை அனுப்பி வைத்துள்ளது.