பிரான்சில் இருந்து இலங்கைக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த ஜெயாகணேஸ் பகீரதிஎன்னும் இளம் தாயாரும் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற அவரது எட்டு வயது மகளும் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து தீவிரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவரது மகள் கல்வியைத் தொடர முடியாமல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
ஏற்கனவே விபுசிகாவும் அவரது தாயாரும் இவ்வாறு கைது செய்யப்பட்டு இன்னும் விடுவிக்கப்படாமல்இருப்பது நீங்கள் அறிந்ததே. ஆட்சி மாறினாலும் தமிழர்களுக்கு எதிரான சிங்கள அரசுகளின் நோக்கங்கள்மாறப்போவதில்லை என்பதை தெட்டத்தெளிவாக இக்கைதுகள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.
இவர்களின் விடுதலை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்து முகமாக பிரான்சு நாடாளுமன்றமுன்றலில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நேற்று திங்கட்கிழமை 09-03-2015 மாலை 3மணிக்கு இடம்பெற்றது.