2018 புத்தாண்டு இன்று பிறக்கிறது. புதிய ஆண்டு அனைவருக்கும் நன்மையாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
புதிய ஆண்டைக் கொண்டாடி வரவேற்ப தென்பது புதுமலர்ச்சி கொள்வதற்கானது. ஆண்டுகளின் கடப்பனவு என்பது வெறுமனே காலத்தின் அசைவு என்று யாரும் பொருள் கொள்ளக்கூடாது.
மாறாக பழையன கழிந்து புதியதை நினை ந்து உத்வேகத்துடன் சவால்களை எதிர் கொண்டு பயணிப்பதற்கான ஆரம்ப நாளாக புத்தாண்டை நாம் வரவேற்க வேண்டும்.
மனித வாழ்க்கை என்பது சவால்கள் நிறை ந்தவை. மேடு பள்ளங்களைக் கொண்டவை. இவற்றையயல்லாம் கடந்து இலக்கை – இலட் சியத்தை அடைவதிலேயே வாழ்க்கையின் வெற்றி தங்கியுள்ளது.
அந்த வகையில் இன்று பிறக்கின்ற 2018 ஆம் ஆண்டை மகிழ்வோடு வரவேற்போம். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என இதய சுத்தியோடு நினைப்போம்.
நேர்மை, நீதி, தியாகம், அர்ப்பணிப்பு என்ப வற்றினூடாக ஒரு சிறந்த நிர்வாகக் கட்டமை ப்பை கட்டி எழுப்புவது என உறுதிபூணுவோம்.
எங்கள் உறவுகளின் துன்பத்தையும் ஏழ்மை யையும் போக்க நாம் ஒவ்வொருவரும் எம் மாலான பங்களிப்பை வழங்குவோம் என்று உறுதியுரை எடுத்துக் கொள்வோம்.
கடந்து செல்லும் 2017ஆம் ஆண்டில் நடந்த தவறுகளையும் பொருத்தமற்ற செயற் பாடுகளையும் புதிய ஆண்டில் திருத்தம் செய்து சரியான பாதையில் பயணிக்க நாம் தயாராக வேண்டும்.
இலங்கைத் திருநாட்டில் தமிழ் மக்கள் படும் துன்ப துயரங்கள் கொஞ்சமல்ல. காலத்துக் குக் காலம் ஆட்சிப்பீடமேறியவர்கள் தமிழ் மக் களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது என்பதை விடுத்து, தமிழ் மக்களுக்கு எதிரான வேலைகளையே செய்தனர்.
இந்த நாட்டில் ஆட்சி நடத்தும் இனத்தின் புத்திஜீவிகள் தமிழ் மக்களும் சகல உரிமை களோடு வாழ வேண்டும் என நினைப்பதற்கு மாறாக,
தமிழ் மக்களை எங்ஙனம் நசுக்க முடியும், இதற்காக சட்டமூலங்களையும் வரலாற்று அம்சங்களையும் எப்படியாக மாற்றியமைக்க முடியும் என்பது பற்றியே சதா சிந்தித்தனர்.
இந்தச் சிந்தனை அந்த இனம் சார்ந்த சாமானிய மக்களிடமும் ஆழமாக செலுத்தப் பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழினத்தின் அரசியல் தலைவர்கள் சிலரும் தமிழினத்துக்கு எதிரா கச் செயற்பட ஈழத் தமிழினம் எதுவும் செய்ய முடியாத சிக்கலுக்குள் அகப்பட்டுள்ளது.
இதிலிருந்து எங்கள் இனத்தை மீட்டெடுக்க வேண்டும். அந்த மீட்பு உரிமை, பொருளாதா ரம், கல்வி, கலாசாரம், நிர்வாகம், அபிவிருத்தி, புலம்பெயர் உறவுகளுடனான தொடர்பு எனப் பல பரிணாமங்களில் செய்யப்பட வேண்டும். இதனைச் செய்வதற்கு நாம் அனைவரும் திடசங்கற்பம் கொள்வோம்.
பிறக்கின்ற 2018ஆம் ஆண்டில் அனைத்து உரிமைகளையும் தமிழினம் வென்றெடுக்க இறைவனின் துணையோடு தூய்மையான பாதையில் பயணிப்போம்.
(நன்றி:வலம்புரி)