தமது பூர்வீக காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் கடந்த 290 நாட்களாக கடும் குளிர் மழைக்கு மத்தியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்திருந்த நிலை யில் . சிறீலங்கா இராணுவத்தினர் ஆக்கிரமித்திருந்த 133 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த காணி இன்று காலை உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்படவுள்ளதாக சிறீலங்கா மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
கேப்பாப்புலவில் சிறீலங்கா இராணுவத்தினர் ஆக்கிரமித்திருந்த காணியை இடமாற்றுவதற்கு இராணுவதற்தினரால் 148 மில்லியக் ரூபா கோரப்பட்டது.
இந்த நிதியை மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக வழங்கியதை அடுத்து காணியை விடுவிக்க பாதுகாப்பு படையினர் இணக்கம் தெரிவித்ததாக மீள்குடியேற்ற அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுவிக்கப்படவுள்ள கேப்பாப்புலவு காணியில் அடுத்த வருடம் 85 குடும்பங்களை மீள்குடியேற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Home
ஈழச்செய்திகள் கேப்பாப்புலவில் சிறீலங்கா இராணுவத்தினர் ஆக்கிரமித்திருந்த 133 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு!