வேகக்கட்டுப்பாட்டை இழந்த உந்துருளி கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார்
வட்டுக்கோட்டை அராலி மத்தியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரவிச்சந்திரன் ரஜீவன் (வயது 26) என்பவரே மேற்படி சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த வராவார்.
இவருடன் பயணித்த அதே இட த்தை சேர்ந்த கந்தசாமி யதீஷ் (வயது 27) என்பவர் எரிகாயங்களுக்குள்ளாகிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,
மேற்குறித்த இரு நபர்களும் நேற்று சித்தன்கேணியில் மரணச்சடங்கு ஒன்றுக்கு சென்றுவிட்டு நண்பகல் 12 மணியளவில் அராலி நோக்கி உந்துருளியில் வேகமாக வந்துள்ளனர்.
கொட்டைக்காடு வைத்தியசாலைக்கு அண் மையில் இவர்கள் பயணித்த வீதி வளைவாகவும் குன்றும் குழியுமாக காணப்பட்டுள் ளது.
அதிவேகமாக உந்துருளியை அப்பகுதியில் செலுத்தி வந்த காரணத்தால் உந்துருளி வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிரே உள்ள தொலைபேசி இணைப்பு கம்பத்துடன் மோதியுள்ளது.
அப்போது தொலைபேசி இணைப்பு கம் பம் இரண்டாக உடைந்து முறிந்ததுடன் உந்துளியின் பெற்றோல் தொட்டி வெடித்து சிதறி தீப்பற்றியுள்ளது. உந்துளியை ஓட்டிச்சென்றவர் மீது தீப்பற்றி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழ ந்ததுடன் உந்துருளியின் பின்னால் இருந்தவர் முன்னால் தூக்கி வீசப்பட்டு முறி ந்த கம்பத்தில் தொங்கியவண்ணம் இருந்துள்ளார்.
உடனடியாக அப்பகுதியில் இருந்த பொது மக்களால் தீ அணைக்கப்பட்டு படுகாயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரி வில் அனுமதிக்கப்பட்டார்.
உயிரிழந்த இளம் குடும்பஸ்தர் திருமணமாகி 3 வருடங்கள் எனவும் இவருடைய மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
குறித்த மரண விசாரணையை யாழ். போதனா வைத்தியசாலை மரண விசா ரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார்.