உலகெங்கும் வாழ்கின்ற கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்து பிறப்பை இன்று கொண்டாடுகின்றனர். தேவாலயங்களில் நள்ளிரவு ஆராதனைகளும் இடம்பெற்றதைக் காணக் கூடியதாக இருந்தது.
நத்தார் தினத்தை முன்னிட்டு வர்த்தக நிலையங்கள் எங்கும் மக்கள் நேற்றையதினம் மும்முரமாக வர்த்தகத்தில் ஈடுட்டனர்.
புலம் பெயர் தேசங்களிலும் தமிழ் மக்கள் கிறிஸ்துபிறப்பு விழாவை வெகுசிறப்பாக கொண்டாடுகின்றனர்.
இந்த விழாவானது கிறித்தவத் திருவழிபாட்டு ஆண்டில் திருவருகைக் காலத்தினை முடிவு பெறச்செய்து, பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படும் கிறித்து பிறப்புக் காலத்தின் ஆரம்ப நாளாகும்.
இந்த கொண்டாட்டங்களில் திருப்பலி, குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா, வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் பரிமாறல், கிறிஸ்துமஸ் மரத்தை அழகூட்டல், கிறிஸ்துமஸ் மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து என்பன பொதுவாக அடங்கும்.
கிறித்து பிறப்புவிழா கிறித்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும்.
இது பெரும்பாலான கிறித்தவர்களால் டிசம்பர் 25 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
எனினும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் இதனை யூலியின் நாட்காட்டியில் டிசம்பர் 25ஐக் குறிக்கும் நாளான ஜனவரி 7ஆம் நாள் கொண்டாடுகின்றன.
எரிமலை இணையமும் எமது வாசகர்களுக்கு நத்தார் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.