கிளிநொச்சி மாவட்டத்தின் சில பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட, புலோப்பளை கிழக்கு காசிப்பிள்ளைக்காடு கடற்கரையை அண்டிய பகுதியாகும்.
இந்தக் கடற்கரையிலிருந்து சுமார் 25 மீற்றர் தூரத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெறுவதாக பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.
இதனால் கடல்நீர் உட்புகுவதுடன், கிணற்று நீர் உவர் நீராக மாறியுள்ளதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வயல் நிலங்களிலும் மணல் அகழப்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பயிர்ச்செய்கைகள் அழிவடைந்துள்ளமையை காண முடிகிறது.
குறித்த பகுதியில் மணல் அகழ்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
அத்துடன், சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, திருகோணமலை கிண்ணியா கண்டல்காடு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களது ஆறு டிப்பர்களும். மூன்று உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.