பிலிப்பைன்சில் சூறாவளி: கடும் வெள்ளம்-133 பேர் உயிரிழப்பு!

0
305

பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானாவ் தீவில் துபோட் நகரருகே டெம்பின் என்ற சூறாவளி கடுமையாக தாக்கியது. இதனால் கடும் வெள்ளம் மற்றும் நில சரிவு ஆகியவை ஏற்பட்டு இதுவரை 133 பேர் உயிரிழ்ந்துள்ளனர் மேலும் பலர் மாயமாகியுள்ளனர்.

மிண்டானவ் தீவில் வெள்ளியன்று புயல் கரையை கடந்தது. பின்னர் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக ககயான் டி ஒரோ (Cagayan de Oro) நகரில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு. கரையோர பகுதிகள் முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது. வீடுகள், வணிக வளாகங்கள் என எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

வெள்ளத்தால் சூழ்ந்த பகுதிகளில் மின்சாரம் மற்றும் தகவல்தொடர்பு சேவைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டது. அவசரகால ஊழியர்கள், ராணுவ வீரர்கள், காவல்துறையினர் மற்றும் ஆர்வலர்கள் ஆகியோர் இணைந்து வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை காப்பாற்றவும், உயிரிழந்தவர்களின் உடலை மீட்கவும், குப்பைகளை அப்புறப்படுத்தவும், மற்றும் மின்சாரம் மற்றும் தகவல்தொடர்பு சேவைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சூறாவளி தாக்குதலில் வெவ்வேறு இடங்களில் மொத்தம் 90 பேர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் பிலிப்பைன்ஸ் நாட்டை சுமார் 20 சூறாவளிகள் தாக்குகிறது.

கடந்த வாரம் கூட மத்திய பிலிப்பைன்ஸில் சூறாவளி தாக்கி 46 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் 2013ம் ஆண்டு ஏற்பட்ட ஹயான் சூறாவளியின் போது சுமார் 8000 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 2,00,000 பேர் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here