காணாமல் போனவர்களை மீட்டுத்தரக் கோரியும் ஐ.நா நீதியான விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் நல்லூர் ஆலய முன்றலில் கடந்த மூன்று நாள்களாக மேற்கொள்ளப்பட்ட சாகும் வரையான உண்ணாவிரதப்போராட்ட எச்சரிக்கையுடன் நேற்று மாலை முடிவுக்கு வந்தது.
இதன்போது செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி., காணாமற் போனவர்கள் இறந்திருக்கலாம் அல்லது வெளிநாட் டில் இருக்கலாமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டி ருக்கும் கூற்றினை வண்மையாக கண் டித்தார்.
காணாமற்போனோர் பற்றிய விடயங்கள் பழைய அரசாங்கத்துடன் தொடர்புடையது என்கின்ற போதிலும் புதிய அரசாங்கம் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும். அவர்களை கண்டுபிடிக்க அரசாங்கம் முயற்சிக்க வேண்டும். தமிழ் மக்களின் வாக்குகளாலேயே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது என்பதனை ஞாபகத்தில் நிறுத்தி, எமது பிரச்சினைகளுக்கான தீர்வினை புதிய அரசாங்கம் விரைவில் பெற்றுத் தர வேண்டும்” என்றும் சுரேஷ் எம்.பி. கூறினார்.
இதேவேளை, காணாமற்போனோரை கண்டறிந்து தருமாறு கோரி முள்ளிவாய்காளிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி கடந்த மூன்று தினங்களாக நடை பவனியாக வந்தவர்களும் உண் ணாவிரதப் போராட்டத்தின் நிறைவில் கலந்து கொண்டனர்.
வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 06ம் திகதி முதல் நல்லூர் ஆலய முன்றலில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தமை குறிப் பிடத்தக்கது.