ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அறிவித்தமையை திரும்பப்பெற வலியுறுத்தி ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 128 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
ஐ.நா. பொதுச்சபையில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு எதிராக 9 நாடுகள் மட்டுமே வாக்களித்தன.
தங்களுக்கு எதிராகக் கொண்டுவரப்படும் தீர்மானத்தை ஆதரித்தால் நிதியுதவி நிறுத்தப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிரங்கமாக விடுத்த மிரட்டலையும் மீறி 128 நாடுகள் வாக்களித்துள்ளன.
இந்த தீர்மானம் அமெரிக்காவை கட்டுப்படுத்தாது என்றாலும் ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்கா மீதான உலக நாடுகளின் அழுத்தம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், ஐ.நா. நிறைவேற்றிய இந்த தீர்மானத்தை புறக்கணிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
1967 ஆம் ஆண்டு போரில் வென்ற ஜெருசலேமை இஸ்ரேல் தமது தலைநகராக அங்கீகரித்ததை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக கடந்த வாரம் ஐ.நா. பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் 14 நாடுகளும் அமெரிக்காவிற்கு எதிராக வாக்களித்தன. இந்நிலையில், ஐ.நா. பொதுச்சபையில் அமெரிக்காவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Home
உலகச்செய்திகள் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்கா அறிவித்தமைக்கு எதிரான பிரேரணைக்கு 128 நாடுகள் ஆதரவு!