உச்சியை பிளக்கும் வெயிலில் சிறு குட்டையில் தேங்கிய அழுக்கு நீரை மண்டியிட்டு வாயால் உறுஞ்சிக் குடிக்கும் சிறுமியின் புகைப்படம் ஒன்று வெளியாகி உலகை உலுக்கியுள்ளது.
அர்ஜென்டீனாவின் Mbya Guarani சமூகத்தைச் சேர்ந்த 3 அல்லது 4 வயது மதிக்கத்தக்க அந்த சிறுமி உச்சியை பிளக்கும் அந்த வெயிலில் தண்ணீர் தாகத்தால் இவ்வாறு தேங்கிய நீரை வாயால் உறுஞ்சிக் குடித்துள்ளார்.
வறுமையால் தத்தளிக்கும் குறித்த சமூகத்தினர் பகல் வேளைகளில் பிச்சை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் குறித்த புகைப்படத்தை தமது பேஸ்புக் பக்கத்தில் பகிரவும், தற்போது அது வைரலாகி பொதுமக்களிடையே விவாத பொருளாகவும் மாறியுள்ளது.
மட்டுமின்றி சமூக ஆர்வலர் Migue Ríos இந்த விவகாரம் தொடர்பில் தேசிய அளவில் விவாதத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த புகைப்படம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், நாடு வறுமையால் தீபற்றி எரிந்துகொண்டிருக்கும்போது, இச்சிறுமி தம்மை தற்காத்துக் கொள்ள நிலத்தில் மண்டியிட்டுள்ளார்.
ஒரு சமுதாயமாக நாம் ஏதோ தவறிழைக்கின்றோம் இல்லையா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுவரை எவரும் பேச முன்வராத பிரச்னை தொடர்பில் இறுதியாக நம்மை பேச வைத்துவிட்டாள் குறித்த சிறுமி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த புகைப்படத்தை பதிவு செய்த பத்திரிகையாளர் தமது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடவும் தற்போது அது பல மில்லியன் மக்களால் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.
பலர் தங்கள் கருத்துகளை அரசுக்கு எதிராக காட்டமாக பதிவு செய்து வருகின்றனர். அதில் ஒருவர், பசியால் பலர் தினம் இறந்து கொண்டிருக்க, எனது ஆடம்பர வாழ்க்கை குறித்து நான் தம்பட்டம் அடித்து வாழ்ந்து வருகிறேன் என்றால் எத்துணை வெட்கக்கேடானது அது என பதிவிட்டுள்ளார்.
அதே இடத்தில் நீங்கள் உங்களை வைத்து ஒருகணம் சிந்தியுங்கள் அல்லது உங்கள் குழந்தைகளை அதே நிலையில் வைத்துப் பாருங்கள் என ஒருவர் பதிவிட்டுள்ளார்.