வடகொரியா தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்கு எச்சரிக்கை!

0
149

வடகொரியாவின் அணுவாயுத நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் செர்கெய் ரயவ்கோவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடகொரிய விவகாரம் தொடர்பாக, ஊடகமொன்றுக்கு நேற்றைய தினம் வழங்கிய செவ்வியொன்றின் போதே அவர் இதனை வெளியிட்டுள்ளார்.

வடகொரியா மீது அமெரிக்கா கொண்டுள்ள நிலைப்பாடு சர்வதேச ரீதியில் பதற்றநிலைகளை தோற்றுவிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரசெர்கெய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் வடகொரியா மீது மேலும் அழுத்தம் பிரயோகிக்கும் நடவடிக்கை, அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மீண்டும் தோன்றியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் அச்சுறுத்தல் விடுத்தல், அழுத்தம் பிரயோகித்தல், முன்நிபந்தனைகளை முன்வைத்தல் ஆகியவை கைவிடப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு இடையில் அமைதியான முறையில் தீர்வினை பெறுக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்ட அவர், உண்மையான அரசியல் தீர்வை நோக்கி நாம் நகர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here