அமெரிக்க பெரிய பேருந்து தரிப்பிடங்களில் ஒன்றான மேன்ஹெட்டன் மத்திய பேருந்து தரிப்பிட பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தை அடுத்து நியுயோக் நகர பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த சம்பவம் டைம் சதுக்கத்திற்கு அருகில் உள்ள துறைமுக அதிகார சபையின் பஸ் தரிப்பிடத்திலேயே அமெரிக்க நேரப்படி இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, தீவிரவாதத் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட ஒரு நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“பயங்கரவாதிகள் ஜெயிக்க முடியாது. நாங்கள் நியுயார்க்வாசிகள்” என்று பேருந்து முனையத்தில் ஏற்பட்ட வெடிச் சம்பவத்துக்குப் பிறகு நியுயர்க் மேயர் பில் டி பிளேசியோ தெரிவித்தார்.
காலை, டைம்ஸ் சதுக்கத்தின் அருகே உள்ள துறைமுக ஆணைய பஸ் முனையத்தில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
அகாயத் உல்லா என்ற 27 வயது நபர், குறைந்த தொழில்நுட்பம் கொண்ட வெடிக்கும் கருவிகளை தன் உடலில் சுற்றியிருந்தார்.
இந்தநிலையில், மக்கள் நெரிசலுக்கு இடையில் அதை வெடிக்கச் செய்தபோது அவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள புகைப்படத்தில், சந்தேகத்துக்குரியவராகக் கருதப்படும் நபர், துணிகள் கிழிந்து சிதறி, காயங்களுடன் தரையில் கிடப்பதையும், அவரது உடலில் வயர்கள் சுற்றப்பட்டிருப்பதையும் காண முடிகின்றது.
நியுயோர்க் நகரின் பல பகுதிகள் கண்காணிப்பு வலயத்துக்குள்
அந்த நபர் தனியாக செயல்பட்டிருப்பதாக நம்புவதாக மேயர் தெரிவித்துள்ளார்.
”42 ஆவது தெரு, 8 ஆவது அவென்யூ, மான்ஹாட்டனில் ஏற்பட்ட காரணம் அறியப்படாத தீ விபத்து சம்பவத்திற்கு நியூயார்க் நகர பொலிஸார் தக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்” என்று நியூயார்க் பொலிஸார் ட்வீட் செய்துள்ளது.
பேருந்து முனையத்தில் தரைத்தளத்தில் உள்ள சுரங்கப் பாதையில் குழாய் வெடிகுண்டு வெடிக்கப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க ஒளிபரப்பு கூட்டுத்தாபனம் கூறுகின்றன.
துறைமுக ஆணைய பேருந்து முனையம், ஓர் ஆண்டிற்கு 65 மில்லியன் மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் அமெரிக்காவின் மிகப்பெரிய பேருந்து முனையமாகும்.