அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு யேர்மனி தலைநகர் பேர்லினில் பல்லின சமூகம் இணைந்து நடாத்திய மாபெரும் போராட்டத்தில் யேர்மனி தமிழ் பெண்கள் கூட்டமைப்பும் கலந்துகொண்டு தாயகத்தில் ஈழத்து பெண்கள் அனுபவிக்கும் கட்டமைப்புசார் இன அழிப்பை வெளிக்காட்டினார்கள்.
தமிழர் தேசம் முற்றாக ராணுவ பிடியில் சிக்கி தவிக்கும் நிலையில் , சிங்கள பேரினவாத அரசால் தமது கணவர்களை இழந்து தனியாக வாழும் பெண்களின் நிலை மிகவும் மோசமாக இருப்பதையும் மற்றும் விடுதலை வேண்டி போராடும் ஒரு இனத்தை அழிக்கும் முகமாக சிங்கள அரசு தமிழ்ப் பெண்கள் மீது திட்டமிட்ட வகையில் பாலியல் வன்கொடுமையை மேற்கொள்ளுவதாகவும் , இவ் நிகழ்வில் தமிழ் பெண்கள் அமைப்பின் சார்பில் உரையாற்றியவர் தெரிவித்துள்ளார் .
மாபெரும் பேரணியாக நடைபெற்ற அனைத்துலக பெண்கள் தினத்தில் தமிழ் பெண்களும் கலந்துகொண்டது அனைவராலும் வரவேற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.