ஜப்பான் கரைக்கு அடித்துவரப்பட்ட சிறிய மரப்படகு ஒன்றில் எட்டுப் பேரது சிதைந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த படகு வட கொரியாவில் இருந்து வந்தததாக சந்தேகிக்கப்படுகிறது.
ஜப்பானின் மேற்குக் கடற்கரை தீவான சாடோவில் பகுதி அளவு எலும்புக்கூடான இரு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இரு தினங்களிலேயே கடந்த திங்கட்கிழமை இந்த படகு கரை ஒதுங்கியுள்ளது.
இந்த சடங்களுக்கு அருகில் வட கொரிய நாட்டு சிகரெட்டுகள் மற்றும் உயிர் காப்பு அங்கிகளும் இருந்துள்ளன. இந்த பத்து பேரும் வட கொரிய நாட்டவர்கள் என்று கரையோர காவல் படையினர் மற்றும் உள்ளுர் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். ஏழு மீற்றர் நீளம் கொண்ட மீன்பிடி படகில் இருந்த இந்த சடலங்கள் அதிகம் சிதைந்திருப்பதால் அவைகளின் பாலினம் மற்றும் விபரங்களை உறுதி செய்ய முடியாமல் உள்ளது.
இவர்கள் வட கொரியாவில் இருந்து தப்பி வந்தவர்கள் அல்லது சட்டவிரோதமாக மீன் பிடிக்க வந்தவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது.