விபத்தில் மூளைச்சாவு: மாணவரின் உடல் உறுப்புகள் தானம்!

0
135

braindeadமதுராந்தகம் அருகே சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த மாணவர் உடல் உறுப்புகள் சனிக்கிழமை தானமாக அளிக்கப்பட்டன.

மதுராந்தகத்தை அடுத்த சிலாவட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு, ஓட்டுநர். இவரது மகன் சூரியா (17), மதுராந்தகம் இந்து மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் தனது நண்பர் அஸ்லாமுடன் (14) மோட்டார் சைக்களில் வேடந்தாங்கலில் இருந்து புதன்கிழமை மதுராந்தகம் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது திண்டிவனம் நோக்கி வந்த லாரி எதிர்பாராத வகையில், இவர்களின் மீது மோதியது. இதில் சூரியா பலத்த காயம் அடைந்து செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அஸ்லாம் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

பின்னர் சூரியா பெருமாபாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சனிக்கிழமை மூளைச் சாவு அடைந்த சூரியாவின் கல்லீரல், கண்கள், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளை அவரது பெற்றோர் தானமாக அளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here