பிரான்சு நாடாளுமன்றமுன்றலில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

0
370

 

France Kavanagirppu (1)உலகை  ஏமாற்றும்  சிறி லங்கா !

சிறிலங்காவில் இடம் பெற்றுள்ள புதிய அரசுத்தலைவர் மாற்றத்துடன் மனிதவுரிமைகள் விடயத்தில் மிகப்பெரியமுன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக சர்வதேச நாடுகள் நம்பவைக்கப்பட்டுள்ளனவா? என அந்நாடுகளின்அணமைக்கால அறிக்கைகளைப் பார்க்கும் போது எண்ணத் தோன்றுகின்றது.

நிறைவேற்றவே போகாத வாக்குறுதிகளை தாரளமாக அள்ளி வழங்கி சிங்கள அரசு சர்வதேசத்தைத் தனதுசதிவலையில் சிக்கவைத்துள்ளது. முன்னைய ஆடசிக் காலத்தில் மிகப்பெரிய மோசடிகளில் ஊழல்களில்ஈடுபட்டவர்கள் தொடர்பான குற்றச் சாட்டுக்கள்  முன்வைக்கப்பட்டு இப்போது சட்டத்திற்குட்பட்ட ஆட்சிநடைபெறுவதாக உலக நாடுகளை போலியாக நம்பவைக்க தொடரந்து முயற்சிக்கப்படுகிறது. ஆனால்மறுபுறத்தில் குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்களாக அரசினாலேயேபாதுகாக்கப்படுகின்றனர்.

தமிழர்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற இந்த அரசு அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காகத் தினமும்போராடிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்காக பெரிதாக என்ன செய்துவிட்டது? காணமல் போனவர்கள் பிரச்சனைஅரசியல் கைதிகள் விடுதலை பறிக்கப்படட மக்களின்; நிலங்களை  முழமையாக   ஒப்படைப்பது இரகசியவதைமுகாம்கள் குறித்த விசாரணை…. இப்படியே நீண்டுகொண்டே போகும் தமிழரின் அடிப்படையானபிரச்சனைகள் தீர உண்மையான கரிசனை இந்த அரசுக்கு உண்டா?

 ஏன் இல்லை? ஆளுனரை மாற்றினார்கள் தமிழர்களிடமிருந்து பறித்தவற்றில் கொஞ்சத்தை கொடுக்கமுயற்சிக்கிறார்கள் என்று சிலர் சொல்ல முற்படலாம் ஆனால் மேலோட்டமாகச் செய்யும் இந்த மாற்றம் எல்லாம்தமிழர்களை நம்பவைப்பதற்காகவும்  சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கும் இப்படி ஏதேனும் செய்ய வேண்டியகட்டாயத்தில் சிங்கள அரசு இருக்கிறது.

அண்மையில் (02 மார்சு 2015) ஐ.நா மனிதவுரிகைள் அவையில் சிறிலங்காவின் வெளிவிகார அமைச்சர் மங்களசமரவீர பேசும்போது புதிய ஆட்சிமாற்த்தினை ஏற்படுத்திய  மக்கள்  சிறிலங்காவிற்கு மட்டுமல்ல உலகநாடுகள்அனைத்திற்கும்  சனநாயகத்தை நிலை பெறச் செய்துள்ளனர் என்னும் பொருள் பட உரையாற்றினார்.

ஆகா! எவ்வளவு நல்ல மாற்றம் என உலக நாடுகள் சிலாகித்துக் கொண்டிருக்கும் போது கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து பிரான்சில் இருந்து இலங்கைக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த ஜெயாகணேஸ் பகீரதிஎன்னும் இளம் தாயாரும் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற அவரது எட்டு வயது மகளும் தீவிரவாததடுப்புபிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவரது மகள் கல்வியைத் தொடர முடியாமல் எதிர்காலம்கேள்விக்குறியாகியுள்ளது.

ஏற்கனவே விபுசிகாவும் அவரது தாயாரும் இவ்வாறு கைது செய்யப்பட்டு இன்னும் விடுவிக்கப்படாமல்இருப்பது நீங்கள் அறிந்ததே. ஆட்சி மாறினாலும் தமிழர்களுக்கு எதிரான சிங்கள அரசுகளின் நோக்கங்கள்மாறப்போவதில்லை என்பதை தெட்டத்தெளிவாக இக்கைதுகள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.

இவர்களின் கைது தொடர்பாக உடனடியாகவே பிரான்சு வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்கும்இஅரசஅதிபருக்கும் நாம் கொண்டு வந்துள்ளோம்.

இவர்களின் விடுதலை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்து முகமாக பிரான்சு நாடாளுமன்றமுன்றலில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஒன்றையும் எதிர்வரும் திங்கள் கிழமை 09-03-2015 அன்று மாலை 3மணிக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகளவில் மக்கள் பங்கேற்க வேண்டும் என்று அன்பாக வேண்டி நிற்கின்றோம்.

நாமே நமது உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். ஒற்றுமை அதற்கு வலுச்சேர்க்கட்டும்.

ஊடகப்பிரிவு

பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here