புலம்பெயர் தேசமொன்றில் தமிழின உணர்வாளர் ஒருவர். இன்று மாவீரர்களை வணங்கிய காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்கவைத்தது. தனதுகைகளினால் மாவீரர்களை வரைந்து. கவிதை எழுதி, மலர்வைத்து சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தி தமது கடமைகளுக்குத் தயாரானார்.
காா்த்திகை பூவெடுத்து
கல்லறை அருகில்
கலங்கி நான் அழுகிறேன்
உங்களின் நினைவில்
உங்களின் ஒரு தோழன் அழுகின்றேன்
தோழா்களே தோழிகளே……….!
ஆயிரம் கல்லறைகள்
அம்மா அழுது நனைத்த
பல ஆயிரம் கல்லறைகள்
தோழனே தோழியே நீ பாா்…
வானம் விட்டு இறங்கிவிடு ஒருமுறை
தாய் கதறி அழுகிறா பலமுறை
வந்து விடு வந்து விடு
தோழனே எம் தோழியே………. !
தேச மண்ணோடு
மறைந்ததோ தோழா
மனசுக்குள் பாரம் ஆயிரம்
மரணம் வரை சுமையாகுது…
மண்ணை நேசித்த தோழனே
மறுபடி ஒரு பிறவி வருமா
தோள்மீது கைகோா்த்து பேச
தோளோடு தோள்நின்ற
தோழன் உன் நினைவினில்
அழுகிறேன் தோழா உன்
கல்லறை பிழந்து உந்தன்
அழகிய முகம் காட்டு ஒரு
முறை முகம் காட்டு…………!
கறுத்த இரவுகள் கலையுமோ
கண் விழிப்பாரோ கண்மணிகள்
காா்த்திகை நாளிலே
காத்திருக்கும் உறவுகள்
கல்லறை அருகினிலே…
காணத்தான் கண்கள் ஆயிரம்
கண் விழித்திடு என்
ஆசை மகனே மகளே என்று
அழும் அம்மாவின் குரல் கேக்குது
அன்னைத் தமிழீழம் எங்கும்
ஆசை மகனே மகளே எழுந்துவிடு………………!