தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபா கரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒட்டப்பட்ட சுவரொட்டி களையும், மாவீரர் தினத்தில் கலந்து கொள்ளுமாறு ஒட்டப்பட்ட சுவரொட்டி களையும் வல்வெட்டித்துறைபொலி ஸார் பறித்து சென்றுள்ளனர்.
இதே போன்று பருத்தித்துறை யில் மாவீரர் தினத்தில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கும் போது முச்சக்கரவண்டியை பொலி ஸார் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் நேற்று இரவு முழுவதும் பதற்றம் நிலவி யிருந்தது, தலைவர் பிரபாகரனுக்கு இன்றையதினம் அறுபத்தி மூன்றா வது பிறந்த தினமாகும், அதனை யொட்டி நேற்றையதினம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தும், மாவீ ரர் தினத்தில் கலந்து கொள்ளுமாறும் அழை ப்பு விடுத்து துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டு வந்தன. இந்த சுவரொட்டி ஒட்டும் பணிகள் நேற்று இரவு நடைபெற்று கொண்டிருந்த வேளை அப்பகுதிக்கு திடீரென வந்த பொலி ஸார் துண்டு பிரசுரங்களை பறித்து சென்று ள்ளனர். இதேபோன்று தீருவில் குமரப்பா புலேந்திரன் சதுக்கத்தில் நாளைய தினம் நடைபெறவுள்ள மாவீரர் தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு ஒலிவாங்கிகள் மூலம் பருத்தித்துறை பகுதியில் அறிவித்து கொண்டி ருக்கும் போது சக்கோட்டையில் வைத்து ஆட்டோவை வழிமறித்த பொலிஸார், ஆட் டோவையும் சாரதியையும் பருத்தித்துறை பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
இதனை அடுத்து பொதுமக்கள் இரு பொலிஸ் நிலையங்களையும் முற்றுகை யிட்டு பொலிஸார் அராஜகம் செய்வதாக கூடி நின்றார்கள். பின்னர் பொலிஸார் சாரதியை விடுவித்துள்ளனர். எனினும் மாவீரர் தினம் அனுஷ்டிப்பதென்றால் தமக்கு அறிவிக்க வேண்டும் எனவும், தம்மிடம் அனுமதி பெற்றே மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க முடி யும் எனவும் மாவீரர் தின ஏற்பாட்டாளர்க ளுக்கு கூறியுள்ளனர். மேலும் துண்டு பிரசு ரங்களை நேற்று இரவு வரை பொலிஸார் கொடுக்கவில்லை.
எனினும் பொலிஸாரின் அச்சுறுத்தலை கவனத்தில் எடுக்காத இளைஞர்கள் நேற்று இரவு முழுவதும் தீருவிலில் மாவீரர் தின த்தை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். திட்டமிட்டது போன்று மாவீரர் தினம் நாளை அனைத்து இடங்களிலும் நடைபெறும் எனவும் இவ்வா றான அச்சுறுத்தல்களை கண்டு பொதுமக்கள் பயம் கொள்ள தேவையில்லை எனவும், அர சாங்கம் ஒருபோதும் இதற்கு சட்ட நடவடிக்கை எடுக்காது எனவும் மாவீரர் தின நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.