எகிப்தின் வடபகுதியிலுள்ள சினாயில் மசூதியொன்றின் மீது தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 155 ஆக அதிகரித்துள்ளது.
தீவிரவாதிகள் குண்டு தாக்குதல்களை மேற்கொண்ட பின்னர் துப்பாக்கிபிரயோகத்தில் ஈடுபட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மூன்று வருடங்களிற்கு மேலாக சினாயில் இடம்பெற்றுவரும் வன்முறைகளில் இதுவே மிக மோசமான சம்பவம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
அல் ரவ்டா மசூதியில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் வெள்ளை துணியால் போர்த்தப்பட்ட நிலையில் காணப்படுவதை எகிப்தின் அரச தொலைக்காட்சி காண்பித்துள்ளது.
மசூதியிலிருந்து வெளியே வந்து கொண்டிந்தவர்கள் மீது அவர்கள் துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டனர் அம்புலன்;ஸ்கள் மீதும் அவர்கள் தாக்குதலை மேற்கொண்டனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் காரணமாக 155 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் 100ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.