போரதீவு பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் தேன்கூடு நிறவனத்தின் ஏற்பாட்டில் மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிப்பு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
இந் நிகழ்வு நிறுவனத்தின் தலைவர் தா.குகதாசன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதேச செயலாளர் திரு. ராகுலனாயகி அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு சமூகசேவைகள் உத்தியோகஸ்த்தர் கதிரவன் மாற்றுத்திறனாளிகளின் அமைப்பின் தலைவர் தேன்கூடு நிறுவனத்தின் செயலாளர் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந் நிகழ்வில் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய பெற்றோர்கள் மலர்மலை அணிவிக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. மங்கள விழக்கேற்றல் நிகழ்வில் வருகை தந்திருந்த 55 பெற்றோர்களும் சுடர் ஏற்றியதை தொடர்ந்து இதனை தொடர்ந்து தலைமையுரை sso.Ds ஆகியோர் நிகழ்த்தினர்.இந் நிகழ்வில் சேலை வேட்டி மற்றும் ஒரு தென்னம்பிள்ளையும் வழங்கப்பட்டது. மதிய நேர உணவுடன் நிகழ்வு நிறைவடைந்தது.இதற்கான நிதி உதவியினை காந்தள் புலம்பெயர் இளையோர் வழங்கியிருந்தமை கூறிப்பிடத் தக்கது.மொத்தம் 65 மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.