மாவீரர் நாள் வாரத்தின் கார்த்திகை 21 ஐ மாவீரர் நாளின் ஆரம்ப நாளாக தமிழர் தாயகமெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது ,அவ்வகையில் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் மாவீரர் வாரத்தின் 1ம் நாள் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
இறுதி யுத்தம் இடம்பெற்றதன் பிற்பாடு மாவீரர் துயிலுமில்லங்களில் ஸ்ரீலங்கா ராணுவத்தினர் மாவீரர்களின் கல்லறைகளை இடித்தழித்தும் ,நினைவிடங்களின் மேல் இராணுவ காவலரண்களை அமைத்தும் நிலைகொண்டிருந்தனர்/நிலைகொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட துயிலுமில்லங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகள் அந்த அந்த பிரதேச மக்களினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.