உடுத்துறை துயிலுமில்லத்தில் 4 மாவீரர்களின் தாயார் பொதுச்சுடரை ஏற்றுவார்!

0
653

உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் தினத்தன்று, மண்ணின் விடுதலைக்காக நான்கு பிள்ளைகளை வழங்கிய தாயொருவர் பொதுச்சுடரை ஏற்றிவைக்கவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட ஏற்பாட்டுக்குழு பிரதிநிதிகள் எதிர்வரும் 27ம் திகதி வழமை போன்று மாவீரர் துயிலுமில்ல நினைவேந்தல்கள் நடைபெறுமென தெரிவித்தனர்.

மக்களது ஒருமித்த முடிவின் பிரகாரம் மண்ணின் விடுதலைக்காக நான்கு பிள்ளைகளை வழங்கிய தாயொருவர் பொதுச்சுடரை ஏற்றிவைக்கவுள்ளனர். மாவீரர் தின நிகழ்வுகளில் பங்கெடுக்கும் குடும்பங்களது நலன்கருதி மணற்காடு மற்றும் கேவில் பகுதிகளிலிருந்து போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முற்றுமுழுதாக மக்களது பங்கெடுப்பு மற்றும் நிதிப்பங்களிப்புடன் இம்மாவீரர் தினம் முன்னெடுக்கப்படுகிறது. அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கட்சியாக அன்றி மாவீரர்களை நேசிக்கின்ற மதிப்பளிக்கின்றவர்களாக வருகை தரவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here