திருகோணமலை சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தின் சிரமதானப்பணிகள் மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்க 12 பேரை கொண்ட செயற்குழுவினரை தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை சம்பூர் விநாயகர் ஆலய பாலர் பாடசாலை முன்றலில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த குழுவை நியமிக்க தீர்மானக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலின் போது திருமலை மாவட்டத்தில் உள்ள மாவீரர் குடும்பத்தாரின் உறவினர்கள் முன்னாள் போராளிகள் சிவில் அமைப்புக்கள் நலன் விரும்பிகள் மற்றும் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் அடங்களாக 80 பேர் வரையில் கலந்து கொண்டனர்.
மாவீரர் துயிலும் இல்லத்தில் தொடர்ச்சியாக சிரமதானம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய, மாவீரர் குடும்பத்தினர், முன்னாள் போராளிகள், பொது மக்கள் என பலரும் கலந்து சிரமதான நடவடிக்கையினை மேற்கொள்கின்றனர்.
எதிர்வரும் 27ம் திகதி சம்பூர் ஆளம்குளத்தில் மாவீரர் நினைவேந்தல் இடம்பெறவுள்ளதை முன்னிட்டு இந்த சிரமதானப் பணி ஒவ்வொரு நாளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.