இலங்கையில் சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் எதிர் பார்த்தவாறும் திட்டமிட்டபடியும் இலங்கை சம்மந்தப்பட்ட ONHRC விசாரணை அறிக்கை சமர்பிப்பதை UNHRC வரும் புரட்டாதி 2015 ல் சமர்பிப்பதற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் எமது தாயகத்தில் வாழுகின்ற எமது சகோதர சகோதரிகள் கோபமும் விரக்தியும் அடைந்துள்ள நிலையில் இவ் முடிவை எதிர்த்து இந்த அறிக்கை முற்கூட்டியே வரவிருந்த பங்குனி 2015 ல் வெளியிடுமாறு UNHRC க்கு வேண்டு கோள் விடுகின்றனர். இவர்களுடன் தமிழ் இளைய சமுதாயமாகிய நாமும் இணைந்து நிற்கின்றோம்.
இது போன்ற முடிவுகள் எமது தாயகமாகிய ஈழத்துக்கு ஆச்சர்யத்தை கொடுக்க போவதில்லை என்றாலும், தாயகத்திலே படுகின்ற எமது உறவுகளின் அவலம் அரசியலாக்கப்பட்டுவிட்டதை நினைக்கும் போது தாயகத்திலே வாழுகின்ற எமது உறவுகளுக்கும் புலம்பெயர்ந்து வாழுகின்ற எமக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தையும் ,கோபத்தையும் அத்துடன் விரக்தியையும் கொடுக்கின்றது.
ஒவ்வொரு வருடமும் இலங்கை பற்றி UN முடிவுகளை எடுக்க தான் செய்கின்றது. ஆனாலும் அவ் முடிவுகள் மனித உரிமை மீறல்கள் – இனஅழிப்பை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டவை அல்ல. வேறு அனைத்துலக அமைப்புக்களும் அத்துடன் தாயகத்திலே வாழுகின்ற எமது மக்களும் இலங்கை மேற்கொண்ட இனஅழிப்பை பற்றி விசாரணை நடத்து மாறு கேட்டு கொண்டு தான் உள்ளன.
ஈழத் தாயகம் எப்போதுமே இனஅழிப் விசாரணைக்கு பின் நின்றதில்லை. இது வடமாகாணசபை ஒரு மனதாக எடுக்கப்பட்ட தீர்மானத்தில் இருந்து தெட்டத் தெளிவாக விளங்குகின்றது. வடமாகாண சபை ஒரு கோரிக்கையை விடுத்திருந்தது. அதாவது இலங்கை 1948, பிரித்தானிய விடம் இருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து ஒவ்வொரு இலங்கை அரசாங்கம் நடத்திய இனஅழிப்பை பற்றி உண்மையான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று. முதல் அமைச்சர் அவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்ற வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் OISL க்கு இனஅழிப்பை விசாரிக்குமாறும் வலியுறுத்தினார். தமிழ் மக்கள் சார்பில் இது போன்ற ஒரு வலுவான அமைப்பு அழைப்பு விடுத்த போதிலும் UNHRC அறிக்கையை ஒத்தி வைக்கும் தீர்மானத்தை எடுத்துள்ளது. எனவே, மீண்டும் ஒரு முறை சர்வதேசம் தமிழர்களை காப்பதில் அக்கறை கொள்வதில்லை என்பதை நீருபித்திருகின்றது.
தாயகத்திலே வாழுகின்ற எமது சகோதர சகோதரிகள் (யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் ஒன்றியம்/பேராசிரியர்கள் சங்கம் அத்துடன் எமது தாயக மக்கள்) இந்த முடிவை வலிமையாக கண்டித்து இதற்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளனர். ஆகவே, தமிழ் இனத்தின் இளைய சமுதாயத்தின் பிரதிநிதிகளாகவும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பாகிய நாம் எமது ஆணித்தரமான ஆதரவை கொடுத்து எமது உறவுகளுடன் இணைத்து நிற்போமாக!
நாமும் எமது சகோதர சகோதரிகளும் இணைந்து UN இடம் OISL அறிக்கையை எந்தவித தாமதமும் இன்றி, முற்கூட்டியே வரவிருந்த பங்குனி 2015 இல் வெளியிடுமாறும் அத்துடன் தொடர்ந்து 1948 இல் இருந்து இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்பட்ட /நடை பெற்று கொண்டிருக்கும் இனஅழிப்பை பற்றி விசாரணை நடத்துமாறும் வேண்டு கோள் விடுகின்றோம்.
மேலும், தமிழ் இளையோர் அமைப்பாகிய நாம் வலியுறுத்துவது:
1) இலங்கை அரசினால் நடத்தப்பட்டு கொண்டிருக்கும் இனஅழிப்பை தடுத்து நிறுத்துமாறும், அழிக்கப்பட்டு கொண்டிருக்கும் எமது தாயகமாகிய ஈழத்தை காக்குமாறும் சர்வதேச சமூகத்திடம் வேண்டி நிற்கின்றோம்.
2) அனைத்துலகத்தின் மேற்பார்வையில் ஈழத்தில் வாழும் தமிழ் மக்களிடையிலும் புலம்பெயர்ந்த மக்களிடையிலும் பொது வாக்கெடுப்பு நடத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம்
நாம் தொடர்ந்து ஜன நாயக முறையில் ஈழம் என்ற எமது தாயகத்தின் உரிமைக்காகவும், தாயகத்திலே நடக்கின்ற இன அழிப்பை தடுத்து நிறுத்துவதற்காகவும், தமிழ் ஈழத்தின் விடுதலைக்காகவும் தொடர்ந்து போராடுவோம்.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பு